Friday, August 27, 2010

இது பூக்கள் பூக்கும் தருணம்

 இது பூக்கள் பூக்கும் தருணம்,
கண் திறந்து கதிரவன் மெல்ல உதிக்கும்,
வெண் பனித்துளி இலையில் இருந்து உதிரும்,
குயில்களின் குரல்கள் மனதை உருக்கும்,
தென்றல் வந்து மெல்ல வருடும்,
உடல் மெல்ல மெல்ல சிலிர்க்கும்,
மனம் பரவசத்தில் குதிக்கும்,
உனக்கும் எனக்கும் உள்ள நெருக்கம்,

இது மெய் தான என நினைக்கும் பூவே, பெண் பூவே!!!!!!!!!! 

Thursday, August 26, 2010

மனம் சொல்வதை கேள்

 மனிதன் மனம் ஒரு குரங்கு என்பது உண்மை தான்,

நிமிடத்திற்கு நிமிடம் மாறுதல்கள், எண்ணங்கள், விருப்பங்கள்,
சோகங்கள், சந்தோஷங்கள் என பலவற்றை தன்னுள் 
வைத்து கொண்டுள்ளான் மனிதன்

பாவம்?? அவன் தான் என்ன  செய்வான்  

இன்றைய கால கட்டத்தில் மனிதன் எந்திரங்களோடு வாழும்
வாழ்கையை பழகி கொண்டான்,

இன்றைய சுழலில் 
மனம் சொல்வதை கேட்பவர்களை விட,
(மதி) சொல்வதை கேட்பவர்களே அதிகம்,,

ஆறு அறிவு கொண்ட மனிதனின் வாழ்க்கையில் 
ஏழாம் அறிவாய்  கணினி என்னும் கணிப்பொறி வந்துவிட்டது,

அந்த கணினியின் பேச்சுக்கு கட்டுப்பட்டு, தான் வாழ்கையை 
வாழ்ந்து கொண்டிருக்கிறான்,,

தான் சொந்த பந்தங்களை மறந்து,
கட்டளைக்கு கட்டுப்படும் 
கணினியை போல் ஆகி விட்டான் 
நீ தோல்வி அடையம் நேரத்தில் உன் அறிவு சொல்லும்
யோசனையை கேள் , 
உன் வெற்றிக்கான வழிமுறையை அது சொல்லும், 

நீ சந்தோஷ மடையும் நேரத்தில்,
உன் மனம் சொல்வதை 
கேள், அது உன்னை மேலும் உற்சாக படுத்தும் ,,

மனம் சொல்வதை கேள்......

Wednesday, August 25, 2010

காதல்

ஐந்தில் விளையாதது ஐம்பதில் விளையாது என்பது பழமொழி,
அது 
காதலில் மட்டும் விதிவிலக்கு 
ஐந்திலும் வரும், ஐம்பதிலும் வரும் அது தான் காதல்...

எனக்குள்ளும் காதல் நுழைந்தது என்னை கேட்காமல்,
அவள் என் தோழியாக அறிமுகம் ஆன பின்பு,

நேரத்தின் மதிப்பு தெரிந்தது, அவள் அருகில் இல்லாத போது
ஒவ்வொரு வினாடியும் நரகங்களை போல நகர்ந்தது..

எனக்கு என் இப்படி ஆனது என்று ஒவ்வொரு வினாடியும்
எனக்குள் எழும் கேள்விகளுக்கு பதில் கூறமுடியாது  என்னால்,

பல வருடங்களை பழகியதை போல ஒரு உணர்வு அவளை பழகும்
ஒவ்வொரு நொடியும்,

அவள்
நேற்று, என் தோழி

இன்று, என் காதலி

நாளை, என் மனைவி


பொறுத்திருந்து பார்ப்போம்

என்னை பற்றி சில

என் தான் பிறந்தோம் என்று இல்லாமல், நான் பிறந்ததன் அர்தங்களை தேடி அலைந்து கொண்டிருக்கும் ஒரு சாதாரண மனித பிறவி...



நீ எல்லாம் என் பொறியியல் படிக்க வந்து என் என்னுயிரை எடுக்கிறாய்?? என்று, ஆசிரியர் தினமும் கேட்கும் மாணவர்களில் நானும் ஒருவன்...



எப்படியோ கஷ்டப்பட்டு(படிப்பில்) ஒரு இளநிலை படிப்பை முடித்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் கல்லூரிக்கு தினமும் பொய் வந்து கொண்டிருப்பவன்.

நல்ல நண்பர்களை அடையாளம் காணும் வயது,

என்னை பற்றி பிறகு வேறு என்ன சொல்ல, உள்ளதை தானே சொல்ல முடியும் 

இப்படிக்கு தங்கள் அன்புள்ள,

ராம்