Tuesday, November 1, 2011

முதல் வரி! முதல் பிழை!! -1


மஞ்சள் சூரியன் மறையும் நேரம்,
பௌர்ணமி நிலவு மெல்ல மெல்ல
அந்த மாலை நேரம் வெயிலை ஆட்கொண்டு வரும் வேளையில் 
மெல்லிய இசையினை ரசித்து கொண்டிருந்தேன் 
எனது காபின்-ல் அமர்ந்த படியே!!!

பின் மணி 5 ஆகி இருந்தது

மடிக்கணினியை அணைத்துவிட்டு போட்டதை போட்டபடியே விட்டு
காரின் சாவியை தேடி கொண்டிருந்தேன்

நல்ல வேலையாக எப்போதும் எங்கு மறந்து வைப்பேனோ
அங்கு தான் இன்றும் வைத்திருந்தேன்


நான் காரில் பயணிக்கும் நேரத்தில் என்னை பற்றி சில:

நான் சுனில் என்கிற சுனில் குமார், சொந்தமாக தொழில் செய்து கொண்டு இருப்பவன் ரொம்ப நல்லவனும் இல்லை, ரொம்ப கேட்டவனும் இல்லை இது இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு சாதாரண இளைஞன்

நல்ல வசதியான வாழ்கை,
கை நிறைய வருமானம்,
கௌரவமான குடும்பம்
இது தான் என் வாழ்கை சுருக்கம்

இப்படி ஓர் இதமான வேளையில் ஈ.சி.ஆர்  ரோட்டில் காரில் பயணித்து கொண்டிருந்தேன், எங்கு செல்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை மனம் போன போக்கில் எனது கார் சென்று கொண்டிருந்தது

காரின் உள்ள மெல்ல ஒலிக்கும் சிநேகிதியே பாடல் வெளியில் இதமான மழை மனதிற்கு இனம் புரியாத சந்தோஷம், சோகம், கவலை அனைத்தும் என்னை குடிகொண்டிருந்தது அது ஏன் என்று புரியவில்லை??

இடது புறம் எந்த பக்கம் திரும்பினாலும் கடற்கரையில் அந்த சாலை நின்றுவிடும் என்று எனக்கு நன்றாக தெரியும், இருந்தும் மனம் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத ஒரு கடற்கரையை தேடியது இறுதியில் நான் நினைத்த மாதிரி இடத்தை அடைந்தேன்,

மழை ஒன்றும் பெரிதாக பொழியவில்லை என்றாலும் உடலை நனைக்க அது போதுமானதாக இருந்தது, காரிலேயே சிறிது நேரம் அமர்ந்திருந்தேன்

அப்போது என்னையும் கண்டுகொள் என்று எனது கைபேசி ஒலித்தது 
அதில் ஸ்வேதா அழைத்தாள்!!

ஸ்வேதா எனது காதலி நானும் அவளும் நான்கு வருடங்களாக காதலிக்கின்றோம் எங்களது காதல் இருவரின் பெற்றோருக்கும் தெரியாது
(பெற்றோருக்கு தெரியாமல் காதலிப்பதில் தானே சுகம் இருகின்றது, அப்படியே அவர்களிடம் சொன்னாலும் சேர்த்து வைக்கபோவதில்லை??)

கைபேசியை எடுத்து பார்த்தேன்

" இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் " என்று வந்திருந்தது

அந்த வாழ்த்துக்கு பதில் தெரிவிப்பதா, இல்லை வேண்டாமா என்று
கடிகாரத்தில் ஆடும் முள் போல மனம் இரு புறமும் ஆடிகொண்டிருந்தது
கைபேசியை அப்படியே வைத்து விட்டு

மனம் அப்படியே மெல்ல பின்னோக்கி பயணித்து கொண்டிருந்தது,

நான்கு வருடத்திற்கு முன்னால்?


மணி காலை 8:00

அவசர அவசரமாக எழுந்து பல்லை அரைகுறையாக விளக்கி விட்டு,
ஒரு காக்கை குளியல் போட்டுவிட்டு என் அறையை விட்டு வெளியில்
வரும் முன் அரை மணி நேரம் கடந்துவிட்டது  நினைவிற்கு வந்தது

"ஐயோ தாமதமாக போனால் அந்த சறுக்கு மரம் உள்ளே விட மாட்டனே"
என என்னை நானே கடிந்து கொண்டேன்
(சறுக்கு மரம் எனது எமன் 2  வாத்தியார், அதாங்க maths 2 teacher)

எப்படியோ ஒரு வழியாக 9 மணிக்கு அரக்க பறக்க வந்து  சேர்ந்தேன் 

உள்ளே நுழைந்ததும் பேரதிர்ச்சி காத்திருப்பது அப்போது எனக்கு
தெரியாது

வகுப்பறையின் உள்ளே ஒவ்வொருவரும் ஏதோ ரஜினி படத்திற்கு
கதை எழுதுவது போல் கிறுக்கி கொண்டிருந்தனர்

அருகில் சென்று பார்க்கும் பொது தான் தெரிந்தது, அது அவர் கடைசி
வாரம் கொடுத்திருந்த வேலை என்று

இந்த நேரத்தில் என் நண்பன் விக்கி என்னை அழைக்க

"என்னடா சுனில் வொர்க் எல்லாம் முடிச்சுட போல ரொம்ப தைரியமா
சுத்துற"


"நீ வேற வாய கேளராத, இந்த வேலையே இபோ தான் எனக்கு நியாபகம்
வந்தது"

"மச்சி வேலைய முடிக்காட்டி, இன்னைக்கு முழுக்க கிளாஸ்-கு வெளில
தான்டா அத மறந்துடாத"

என அவன் பாட்டுக்கு எழுத ஆரம்பித்துவிட்டான்

ஏற்கனவே உள்ள புகைஞ்சு கிட்டு இருக்கு, அதுல எவன் வேற கரி அள்ளி
கொட்டுறான்

இதுக்கு ஒரே வழி தான் இருக்கு அவருக்கு மதியதுக்கு மேல் தான் வருவார்
அதற்குள் சுதா விடம் சென்று எழுத சொல்ல வேண்டியது தான்

சுதா எனது சிறு வயது தோழி, என்னை பற்றி நன்கு தெரிந்தவள் இவள்
அடிக்கடி என்னை வீட்டில் காப்பற்றுபவள் இவள் தான்

இவள் தந்தையும், எனது தந்தையும் ஒரே அலுவலகத்தில் பணி புரிகின்றனர்
எனது பக்கத்துக்கு வீடு வேறு

அவளது கிளாஸ்-ற்கு சென்றேன் அவளது  தோழிகள் தான் இருந்தர்கள் அவர்களுக்கு எங்கள் நட்பை பற்றி நன்கு தெரியும்

அதனால் எனது கண்கள் அவளை தேடுவதை அறிந்த அவளது தோழிகள்
அவள் இன்னும் வரவில்லை என்று சத்தமாக சொன்னார்கள்

அப்போது தான் என் நினைவுக்கு வந்தது, அவள் இன்று விடுமுறை என்று

என் விதியை எண்ணிக்கொண்டு வந்தேன்

வரும் வழியில் என்னை தள்ளிவிட்டு ஒரு பெண் வேகமாக ஓடினாள்

அவள் முகத்தை பார்க்கும் முன்னரே அந்த பக்கம் திரும்பிவிட்டாள்

நான் அவளை பின் தொடர்ந்து சென்றேன், கண்ணில் சிக்கவில்லை

அவளை தேடிக்கொண்டு அலைந்தேன்


தேடல் தொடரும்... Saturday, October 15, 2011

10 அடி இடைவேளை (சிறுகதை)

நான் கார்த்திக்,
இளங்கலை இறுதி ஆண்டு படிக்கும் மாணவன் அளவான குடும்பம் ஆதலால் நடுத்தர வர்கமாய் இருந்தாலும் வசதி வாய்ப்பிற்கு குறைவில்லை

எங்களது வீடு நகரத்தின் மையப்பகுதியில் இடம் பெற்றுள்ள அடுக்கு மாடி
குடியிருப்பு அக்கம் பக்கம் உள்ள வீடுகளில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் வாழும் மனிதர்கள் வாழும் பகுதி, இங்கு சுயநலம் அதிகமாக இருக்கும் அந்த நாலடி சுவற்றுக்குள் வாழ பழகிக்கொண்ட மனிதர்கள் இங்கு அதிகம்,
ஆனால் இந்த குடியிருப்புக்கு இன்னொரு முகமும் உண்டு

அது இவர்களின் சந்ததிகள்,

அவர்களுக்கு இந்த பிரிவினை இல்லை, தங்களுக்கு என்று எந்த விதமான
எதிர்பார்ப்புகளும் இல்லாமல் பழக தெரிந்தவர்கள் அவர்களுக்குள் எந்த விதமான சாதி, மதம் பாகுபாடு இல்லை இவர்களுக்கு தெரிந்தது இருப்பது எல்லாம் கள்ளம், கபடம் இல்லாத மனது மட்டுமே!!

எனது வீட்டின் எதிரே உள்ள 7h பிளாட்டில் இருப்பவர் காஞ்சனா பாட்டி அவர்களுக்கு இரு மகன்கள் ஒருவர் வெளிநாட்டில் கைநிறைய சம்பாதிப்பவர் அமெரிக்காவில் வளர்ந்த தமிழ் பெண்மணியை திருமணமும் செய்து கொண்டார் இந்த திருமணம் பற்றி பாட்டிக்கே வேறொருவர் சொல்லியே தெரியும் அந்த அளவிற்கு தாயின் மேல் பாசம் அவருக்கு

மற்றொருவர், இப்போது இந்த பாட்டியை கவனித்து கொண்டிருக்கும் இல்லை, இல்லை வீட்டில் தங்க இடம் கொடுத்திருக்கும் இன்னொரு மகன் மகனுக்கோ
தாயின் உடல்நலத்தை பற்றியோ, எதைபற்றியோ கவலை இல்லாத மனிதர்

ஒரு சமயம் அந்த பாட்டிக்கு உடம்பு சரி இல்லாமல் போகவே அந்த மகனும்
அந்த சமயத்தில் ஊரில் இல்லை, இருந்தாலும் உபோயகம் இல்லை

என்னுடைய அம்மா என்னை அழைத்து


" கார்த்தி, பக்கத்துக்கு வீட்டு பாட்டிக்கு உடம்பு சரி இல்லை, நீ அவங்களை
கூட்டிட்டு பக்கத்துல இருக்கிற கிளினிக்கு போயிட்டு வானு சொன்னங்க
எனக்கு ஏனோ அதில் உடன்பாடு இல்லை"


இந்த பாட்டியின் மீது எனது அம்மாவிற்கு எப்போதும் தனி அக்கறை உண்டு,
அது எதனால் என்று என் அம்மாவிடமே கேட்டேவிட்டேன்

அதற்கு அவர்கள் சொன்னார்கள்,

" கார்த்திக் நான் சின்ன வயசுலேயே எனக்கு உன்னோட பாட்டி மேல அளவுக்கு அதிகமா பாசம் வெச்சுருந்தேன், ஒரு தாய் தன்னோட
குழந்தைக்காக எந்த அளவுக்கு தியாகம் பண்ணுவாங்கனு அவங்கள கட்டிகிட்ட புருஷனுக்கே தெரியாது சின்ன சின்ன விஷயங்களை கூட
தான் குழந்தையை பாதிக்க கூடாதுன்னு ரொம்ப ஜாக்கிரதைய இருப்பாங்க"

" இது மாதிரி ஒவ்வொரு அம்மாவும் தான் பிள்ளைங்களுக்காக தியாகம்
செஞ்சது அதிகம், எனக்கு உடம்பு சரி இல்லாத நேரத்தில் இரவுகளை தூக்கம் இல்லாமலும், பகல்களை உணவு இல்லாமலும் களித்தாள்"

" இப்படி என்னை இமை போல் பார்த்து கொண்ட தாய்க்கு என்ன கைம்மாறு
செய்ய வேண்டும் என்று எனக்கு அப்போது தெரியவில்லை"

" அன்று என் மனதில் ஒரு விதை முளைத்தது, என் அம்மாவிற்கு எந்த விதமான தொல்லையும் கொடுக்காமல் அவள் நினைத்தது போல்
ஒரு உயர்ந்த பதவிக்கு வர வேண்டும் என்ற வெறி இருந்தது அதை நான்
சாதித்தும் காட்டினேன், ஆனால் என்னுடைய துரோதிர்ஷ்டம் இன்று என்னுடைய என் அருகினில் இல்லை நான் வாழும் இந்த சந்தோஷமான
வாழ்கையை என் அம்மா இப்போது கடவுளாக பார்த்து கொண்டிருக்கிறார்
என்று சொல்லும் போதே அவர்கள் கண்ணில் கண்ணீர் துளி எட்டிபார்பதை
நான் கவனிக்க தவறவில்லை"


" அந்த காஞ்சனா பாட்டியை பார்க்கும் போது என்னுள் என்னுடைய
அம்மாவின் பாசம் தான் எனக்கு நியாபகத்திற்கு வருகிறது, அவர்கள் மகன்கள்
அவர்களை தவிக்க விடுவதை 10 அடி இடைவேளையில் இருந்து கொண்டு
என்னால் பார்க்க முடியவில்லை"

" நமக்கு எது அதிகம் பிடிக்கிறதோ அது நம்மை விட்டு வெகு விரைவில் பிரிந்து விடும் என்பது என்னுடைய தாய் என்னை விட்டு பிரியும் பொழுது அந்த நிமிடம் எனக்கு புரிந்தது "

இப்படி என் அம்மாவின் மனதில் இருந்தவற்றை பகிர்ந்து கொண்டாள்.


என் அம்மா இப்படி சொன்னவுடன் என் மனதில் ஏற்பட்ட மாற்றத்தை
அவர்கள் கவனித்திருக்க வாய்ப்பில்லை,


அன்று காஞ்சனா பாட்டியை மருத்தவரிடம் காட்டிவிட்டு, அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை வாங்கி கொடுத்து விட்டு வீடு வந்து சேர்ந்தோம்.


எனது வீட்டின் உள்ள சென்றேன், ஒரு உருப்படியான காரியம் செய்து விட்டு வந்திருக்கிறேன் என்னையே நான் கூறிக்கொண்டேன், உள்ளே என் அம்மா அயர்ந்து உறங்கி கொண்டிருந்தாள் அவளை பார்க்கும் போதே எனக்கு பெருமிதமாக இருந்தது அவள் நெற்றியில் முத்தமிட்டு போர்வையை போர்த்திவிட்டு வந்தேன்

நாளடைவில் நானும் அடிமையானேன் இந்த தாயின் பாசத்திற்கு,
என்ன தவம் செய்தேனோ இவளை என் அன்னையாக கிடைத்தமைக்கு???-முற்றும்.Sunday, September 18, 2011

நான் எழுதிய சில வரிகள் 
இல்லை இல்லை "வலிகள்"

இன்று என்னவளின் புகைப்படம் கண்டேன்,
நீண்ட நாட்களுக்குப் பிறகு 
அப்போதே எனக்கு தெரிந்து விட்டது,,
இன்று என்னுடைய துயிலை தொலைதுவிட்டேனென்று,,


பூக்களுக்கு ரோஜா, மல்லிகை என்று பெயர் சுட்டியவன் 
என் காதலியை ஒரு முறை பார்த்திருந்தால் அவள் 
பெயரை பூக்களுக்கு சூட்டி இருப்பான்


காதலின் உண்மையான வெற்றி திருமணத்தில் மட்டும் அல்ல 
அது காதலிப்பவர்களின் சந்தோசத்திலும் இருக்கிறது,
அவளை விட்டு விலகி அவளை சந்தோஷபடுத்தும் 
காதலன்களில் நானும் இன்று ஒருவனாக...

படித்ததில் பிடித்தது

வலைத்தளம்:
http://facebook.com/director.bharathi
தமிழச்சி வயிற்றுக் கருக்கள்
புழுக்களல்ல
நீங்கள் நசுக்குவதற்கு- அவை
புலிகள்...
கருப்பை கதவடைக்கும்வரை
கருக்களை சுமக்கும்
தமிழச்சி கருவறைகள்!
பிறக்கும் அதன் ஒலிகள!!
Friday, August 5, 2011

இந்த வலைபின்னல் பற்றி சில...

முதலில் நான் இந்த பின்னலை தொடங்க வேண்டும், 
என்ற எண்ணத்தை என்னுள் ஏற்படுத்தியது என் அண்ணனுடைய 
வலைபின்னல் தான்,
பின்பு இன்னும் சில வலைப்பின்னல்களை படித்த போது தான்
என் நாமும் சொந்தமாக தொடங்க வேண்டும்,
என்ற என் மனதின் வார்த்தைகளை வைத்தே தொடங்க 
முடிவுசெய்தேன் 

பிறகு, என்ன பெயர் வைக்கலாம் என்ற பொது என்னுள்
எழுந்த கேள்விகளுக்கு அளவில்லை
அப்போது தன தேடலை முன் வைத்தே இந்த வலை தளத்திற்கு பெயர் சூட்டலாம் என முடிவு செய்து "வாழ்கையை தேடிய பயணம்" என்று பெயர் வைத்தேன்