Saturday, October 15, 2011

10 அடி இடைவேளை (சிறுகதை)

நான் கார்த்திக்,
இளங்கலை இறுதி ஆண்டு படிக்கும் மாணவன் அளவான குடும்பம் ஆதலால் நடுத்தர வர்கமாய் இருந்தாலும் வசதி வாய்ப்பிற்கு குறைவில்லை

எங்களது வீடு நகரத்தின் மையப்பகுதியில் இடம் பெற்றுள்ள அடுக்கு மாடி
குடியிருப்பு அக்கம் பக்கம் உள்ள வீடுகளில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் வாழும் மனிதர்கள் வாழும் பகுதி, இங்கு சுயநலம் அதிகமாக இருக்கும் அந்த நாலடி சுவற்றுக்குள் வாழ பழகிக்கொண்ட மனிதர்கள் இங்கு அதிகம்,
ஆனால் இந்த குடியிருப்புக்கு இன்னொரு முகமும் உண்டு

அது இவர்களின் சந்ததிகள்,

அவர்களுக்கு இந்த பிரிவினை இல்லை, தங்களுக்கு என்று எந்த விதமான
எதிர்பார்ப்புகளும் இல்லாமல் பழக தெரிந்தவர்கள் அவர்களுக்குள் எந்த விதமான சாதி, மதம் பாகுபாடு இல்லை இவர்களுக்கு தெரிந்தது இருப்பது எல்லாம் கள்ளம், கபடம் இல்லாத மனது மட்டுமே!!

எனது வீட்டின் எதிரே உள்ள 7h பிளாட்டில் இருப்பவர் காஞ்சனா பாட்டி அவர்களுக்கு இரு மகன்கள் ஒருவர் வெளிநாட்டில் கைநிறைய சம்பாதிப்பவர் அமெரிக்காவில் வளர்ந்த தமிழ் பெண்மணியை திருமணமும் செய்து கொண்டார் இந்த திருமணம் பற்றி பாட்டிக்கே வேறொருவர் சொல்லியே தெரியும் அந்த அளவிற்கு தாயின் மேல் பாசம் அவருக்கு

மற்றொருவர், இப்போது இந்த பாட்டியை கவனித்து கொண்டிருக்கும் இல்லை, இல்லை வீட்டில் தங்க இடம் கொடுத்திருக்கும் இன்னொரு மகன் மகனுக்கோ
தாயின் உடல்நலத்தை பற்றியோ, எதைபற்றியோ கவலை இல்லாத மனிதர்

ஒரு சமயம் அந்த பாட்டிக்கு உடம்பு சரி இல்லாமல் போகவே அந்த மகனும்
அந்த சமயத்தில் ஊரில் இல்லை, இருந்தாலும் உபோயகம் இல்லை

என்னுடைய அம்மா என்னை அழைத்து


" கார்த்தி, பக்கத்துக்கு வீட்டு பாட்டிக்கு உடம்பு சரி இல்லை, நீ அவங்களை
கூட்டிட்டு பக்கத்துல இருக்கிற கிளினிக்கு போயிட்டு வானு சொன்னங்க
எனக்கு ஏனோ அதில் உடன்பாடு இல்லை"


இந்த பாட்டியின் மீது எனது அம்மாவிற்கு எப்போதும் தனி அக்கறை உண்டு,
அது எதனால் என்று என் அம்மாவிடமே கேட்டேவிட்டேன்

அதற்கு அவர்கள் சொன்னார்கள்,

" கார்த்திக் நான் சின்ன வயசுலேயே எனக்கு உன்னோட பாட்டி மேல அளவுக்கு அதிகமா பாசம் வெச்சுருந்தேன், ஒரு தாய் தன்னோட
குழந்தைக்காக எந்த அளவுக்கு தியாகம் பண்ணுவாங்கனு அவங்கள கட்டிகிட்ட புருஷனுக்கே தெரியாது சின்ன சின்ன விஷயங்களை கூட
தான் குழந்தையை பாதிக்க கூடாதுன்னு ரொம்ப ஜாக்கிரதைய இருப்பாங்க"

" இது மாதிரி ஒவ்வொரு அம்மாவும் தான் பிள்ளைங்களுக்காக தியாகம்
செஞ்சது அதிகம், எனக்கு உடம்பு சரி இல்லாத நேரத்தில் இரவுகளை தூக்கம் இல்லாமலும், பகல்களை உணவு இல்லாமலும் களித்தாள்"

" இப்படி என்னை இமை போல் பார்த்து கொண்ட தாய்க்கு என்ன கைம்மாறு
செய்ய வேண்டும் என்று எனக்கு அப்போது தெரியவில்லை"

" அன்று என் மனதில் ஒரு விதை முளைத்தது, என் அம்மாவிற்கு எந்த விதமான தொல்லையும் கொடுக்காமல் அவள் நினைத்தது போல்
ஒரு உயர்ந்த பதவிக்கு வர வேண்டும் என்ற வெறி இருந்தது அதை நான்
சாதித்தும் காட்டினேன், ஆனால் என்னுடைய துரோதிர்ஷ்டம் இன்று என்னுடைய என் அருகினில் இல்லை நான் வாழும் இந்த சந்தோஷமான
வாழ்கையை என் அம்மா இப்போது கடவுளாக பார்த்து கொண்டிருக்கிறார்
என்று சொல்லும் போதே அவர்கள் கண்ணில் கண்ணீர் துளி எட்டிபார்பதை
நான் கவனிக்க தவறவில்லை"


" அந்த காஞ்சனா பாட்டியை பார்க்கும் போது என்னுள் என்னுடைய
அம்மாவின் பாசம் தான் எனக்கு நியாபகத்திற்கு வருகிறது, அவர்கள் மகன்கள்
அவர்களை தவிக்க விடுவதை 10 அடி இடைவேளையில் இருந்து கொண்டு
என்னால் பார்க்க முடியவில்லை"

" நமக்கு எது அதிகம் பிடிக்கிறதோ அது நம்மை விட்டு வெகு விரைவில் பிரிந்து விடும் என்பது என்னுடைய தாய் என்னை விட்டு பிரியும் பொழுது அந்த நிமிடம் எனக்கு புரிந்தது "

இப்படி என் அம்மாவின் மனதில் இருந்தவற்றை பகிர்ந்து கொண்டாள்.


என் அம்மா இப்படி சொன்னவுடன் என் மனதில் ஏற்பட்ட மாற்றத்தை
அவர்கள் கவனித்திருக்க வாய்ப்பில்லை,


அன்று காஞ்சனா பாட்டியை மருத்தவரிடம் காட்டிவிட்டு, அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை வாங்கி கொடுத்து விட்டு வீடு வந்து சேர்ந்தோம்.


எனது வீட்டின் உள்ள சென்றேன், ஒரு உருப்படியான காரியம் செய்து விட்டு வந்திருக்கிறேன் என்னையே நான் கூறிக்கொண்டேன், உள்ளே என் அம்மா அயர்ந்து உறங்கி கொண்டிருந்தாள் அவளை பார்க்கும் போதே எனக்கு பெருமிதமாக இருந்தது அவள் நெற்றியில் முத்தமிட்டு போர்வையை போர்த்திவிட்டு வந்தேன்

நாளடைவில் நானும் அடிமையானேன் இந்த தாயின் பாசத்திற்கு,
என்ன தவம் செய்தேனோ இவளை என் அன்னையாக கிடைத்தமைக்கு???



-முற்றும்.



No comments:

Post a Comment