Wednesday, February 15, 2012

சிரிப்பதா, அழுவதா??சிரிப்பதா, அழுவதா??


என்னை அவள் வெறுக்கிறாள்
என்று தெரிந்து கொண்டேன் 
நான் கொடுத்த காதல் கடிதங்களை
என் முகத்தில் அவள் தூக்கி
எறிந்தபோது??


பள்ளியில் என்னை ஆசிரியர் 
மற்றவர்கள் முன்னிலையில் 
வீட்டு பாடங்களை கேட்டது 
அவமானம் என்று கருதி அதன் பின்பு 
பள்ளிக்கு செல்லாத நான் 


இன்று இதனை பேர் முன்னிலையில் 
என்னை வேண்டாம், 
என்னை தொந்தரவு செய்யாதே 
என கூறியும் அவள் பின்னால்
நாய் போல திரியும் இந்த மனதை
நான் என்ன வென்று சொல்வேன் 


கைபேசியில் குறுஞ்செய்தி சத்தம்
கேட்டவுடன் அவள் ஏதும் செய்தி 
அனுப்பி இருப்பாளோ?
என்று என்னை நானே ஏமாற்றி
கொள்ளும் இந்த காதலை என்னவென்று 
சொல்வேன்


இறுதியாக நான் காத்திருந்த அந்த 
நாளும் வந்தது என்னவளிடம் 
அழைப்பு வந்தது 


மனம் எண்ணில் அடங்க கற்பனைகளோடு 
அவளிடம் பேசினேன் அப்போது 
அவள் தான் தெரிந்தது என் மீது 
பாசத்தோடு அவள் என்னை அழைக்கவில்லை 


அவளின் திருமண தேதியை என்னிடம்
தெரிவிக்க என்று 


சிரிப்பதா, அழுவதா???

Thursday, February 9, 2012

முதல் வரி! முதல் பிழை!! -2

பாகம் 1 -http://kangalumkavipaduthe.blogspot.in/2011/10/blog-post.html

அவளை தேடி அலைந்து கொண்டிருக்கும் பொழுது கல்லூரி மணி
ஒழித்தது

இதற்கு மேல் அவளை தேடி கொண்டிருப்பதில் எந்த விதமான உபயோகமும்
இல்லை என்பதனை உணர்ந்து அங்கிருந்து நகர்ந்தேன்

அந்த பெண்ணை இப்படி தவற விட்டுவிட்டோமே, என்ற எண்ணம் என் மனதில் மேலோங்கி நின்றது இருப்பினும் நம் கல்லூரியில் தானே படிக்கிறாள்
அப்புறமாக பார்த்து கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்

அவளை சந்தித்ததின் ராசியோ என்னமோ தெரியவில்லை, எப்போதுமே
வகுப்பிற்கு விடுமுறை எடுக்காமல் வரும் சறுக்கு மரம் அன்று ஏனோ
வரவில்லை

எல்லாம் அந்த பெண்ணை சந்தித்ததின் மகிமை என நினைத்து கொண்டேன்


பள்ளி முடிந்த நண்பர்களோடு வீடு வந்து சேர்ந்தேன், எப்போதும் நான்
சுதாவுடன் வருவது தான் வழக்கம் அன்று வேறு வழி இல்லாததால்
அவர்களோடு வந்தேன்


வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக சுதாவை சந்திக்க சென்றேன்,
அங்கு அவள் அம்மாவிடம் அவள் எங்கே என்று வினவ இன்று கல்லூரி
செல்லாத காரணத்தால் இன்றைய பாடங்களை தெரிந்து கொள்வதற்காக
அவள் தோழி வீட்டிற்கு இப்போது தான் சென்று உள்ளதாக கூறினார்கள்

நானும் அப்புறமாய் சந்தித்து கொள்ளலாம் என்று விட்டுவிட்டு, என் நண்பர்களோடு வெளியில் சென்று விட்டேன்

நாங்கள் அனைவரும் கல்லூரி முடிந்ததும், நாங்கள் வழக்கமாக
சந்திக்கும் இடமான பொட்டிக்கடையில் ஆஜரகிவிட்டோம்

அந்த கடை எங்கள் வீட்டில் இருந்து தொலைவில் உள்ள கடை தான்,
அந்த கடையை நாங்கள் தேர்ந்து எடுத்ததற்கு காரணம் அந்த பகுதியில்
என் தந்தை அடிக்கடி வரமாட்டார், நிம்மதியாக சிகரட் பிடிக்கலாம்
என்று தான்

சிகரட்டை வாயில் பற்றவைத்து எமனை உள்ளே இழுத்து, வெளியே விட்டு கொண்டிருந்தேன்

அந்த நேரம் என் நண்பன் அருகில் இருந்து சைகை தர என் தந்தை தான் வந்து
விட்டாரோ என பதறி அடித்து சிகரட்டை காலில் போட்டு மிதித்து
வாயில் உள்ள புகையை அந்த பக்கம் திரும்பி ஊதி விட்டு திரும்பினேன்

அந்த பக்கம் திரும்பி பார்த்தாள் சுதா வந்து கொண்டிருந்தாள்,
இவளுக்காகவா இதை கீழே போட்டோம் அவளுக்கு தான் நான் புகை
பிடிப்பேன் என்று நன்கு தெரியுமே!!

அவள் அருகில் யாரோ வருவது போல தெரிந்தது, ஒரு வேளை அவள் தங்கையாக இருக்குமோ என எண்ணி அவளுடன் வருவது யார் என்று உற்று நோக்கினேன்,

அப்போது தான் தெரிந்தது என்னை இடித்து விட்டு என்னை கடந்து சென்ற அந்த தேவதையே தான் இவள் எப்படி சுதாவுடன் வருகிறாள் என்று எண்ணி கொண்டேன்


ஒரு வேளை சுதாவின் தோழியாக இருப்பாளோ?
இல்லையே சுதாவின் தோழிகள் அனைவரையும் நான் நன்கு அறிவேன்
இருப்பினும் இவளுக்கும், சுதாவிற்கும் என்ன சம்மந்தம் இருக்க போகிறது
என்று யோசித்து கொண்டிருந்தேன்

இந்த நேரத்தில் அவர்கள் நாங்கள் நின்ற இடத்தினை விட்டு கடந்து
சென்றார்கள்

என் நண்பர்களிடம் நான் கிளம்புகிறேன் என்று சொல்லிக்கொண்டு
உடனே புறப்பட்டு வந்துவிட்டேன்

சீக்கிரம் போ, இல்லைனா சுதா உங்கள் வீட்டுல சிகரட் விஷயத்தை போட்டு
கொடுத்திடபோற என என் நண்பர்கள் பேசுவது என் காதுகளில் நன்கு விழுந்தது

அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அந்த இடத்தை விட்டு மாயமாய் மறைந்தேன்

வந்ததும் என் வீட்டிற்கு கூட செல்லாமல், சுதா வீட்டினை நோக்கி
நகர்ந்தேன்

அவள் ஏதோ கணினியில் நொண்டி கொண்டிருந்தாள்,

" வாடா, இன்னைக்கு என்ன கிளாஸ்-க்கு வெளில நிக்க வச்சுட்டார
சறுக்கு மரம்?"

" இல்லை இன்னைக்கு, அவர் வரல தப்பிச்சுட்டேன், அத விடு
அப்போ உன் கூட வந்தால ஒருத்தி யார் அவ"

" நீ யார கேக்குற"

" சாயந்திரம் நான் போட்டி கடையில சிகரட் அடிக்கும் போது, உன் கூட
வந்தால அவ யாரு"

" நீ ஸ்வேதாவ, கேக்குறியா'

" அது யாருன்னு தெரியாம தான் உன் கிட்ட கேட்டுகிட்டு இருக்கேன்
பின்னே எனக்கு எப்படி எப்படி தெரியும் அவ ஸ்வேதாவ, மாலாவன்னு?"


" சரி, இப்போ நீ எதுக்கு அவளை பத்தி விசாரிக்குற"


" அவளை உனக்கு முன்னாடியே தெரியுமா?"


"முன்னாடியே தெரிஞ்சிருந்த நான் ஏன் உன் கிட்ட வந்து கேட்க போறேன்,
அவளை பத்தி தெரிஞ்சுக்கலாம்னு தான் உன் கிட்ட வந்து கேக்குறேன்"


" அவளை பத்தி நீ எதுக்கு தெரிஞ்சுக்கணும் என்னப்பா, அவளை லவ் பன்றியா?"

" அப்படி எல்லாம் இல்லை"

" சும்மா தெரிஞ்சுக்கலாம்னு தான், மத்த படி நீ நெனைக்கிற மாதிரி எதுவும்
இல்லை"

என்று அவன் உதடுகள் தான் கூறியதே தவிர, அவன் சொல்வது பொய் பொய் என்பதனை உணர்திக்கொண்டிருந்தது அவனது கண்கள் இதை சுதா
கவனிக்க தவறவில்லை

அவளை பற்றி தனக்கு தெரிந்த எல்லா தகவல்களையும்,
அவனிடம் அவள் கூறினாள் அதன் பின்னர் தான் தெரிந்தது அவள்
தன்னுடைய கல்லூரியில் புதிதாக சேர்ந்திருக்கிறாள் என்று

அவள் இது நாள் வரை நடந்த பாடங்களை, சுதாவிடம் கேட்டு தெரிந்து
கொள்வதற்காக அவள் தனது வீட்டிற்கு வரும் படி அழைத்து கொண்டதால்
தான் சென்றதாகவும் சுதா தெரிவித்தாள்

அவளிடம் எப்படி அறிமுகமாவது என யோசித்து கொண்டிருந்தேன்,
சுதாவிடமே கேட்டு விடலாமா என யோசித்தேன், என்னால் அவர்கள் நட்பு
பாலகி விட கூடாது என எண்ணி அவளிடம் கேட்க எனக்கு மனம் வரவில்லை

சரி, எனது நண்பர்கள் யாரிடவது கேட்கலாம் என்றால்
நீயும் அந்த நோய்ல மாடிகிட்டாய?
என என்னை கலாய்ப்பார்கள் என்று அவர்களிடம் கேட்காமல் விட்டுவிட்டேன்

நாளை காலை அவளை சந்திக்க போகிறோம் என்ற எண்ணமே அந்த இரவை நித்திரை இல்லாமல் நீண்ட இரவாக விடிய செய்தது

காதல் ஒரு பைத்தியகாரத்தனம் என்று எண்ணி கொண்டிருந்தேன்,
என்னை அவளது மின்னல் கண்கள் தாக்கும் வரையில்

வழக்கத்தை விட அதிக நேரம் குளித்து, அழகாக நல்ல உடையினை
உடுத்திக்கொண்டு கல்லூரிக்கு சீக்கிரமே கிளம்பினேன்

ஒருவேளை அவள் எனக்கு முன்னதாகவே வந்து விட்டால், என்ற எண்ணம் தான் நான் சீக்கிரமே கிளம்பவைத்தது

அப்போது நான் வெளியில் வரவும் சுதா வீட்டில் இருந்து தனது தந்தையுடன் கிளம்பி கொண்டிருந்தாள்

அவர் தந்தைக்கு ஒரு வணக்கத்தை வைத்து விட்டு சிட்டாக கிளம்பி கல்லூரிக்கு பறந்தேன்

காலை 8 .30 கல்லூரி எப்படி இருக்கும் என்று, அன்று தான் முதல் முறையாக
கண்டேன்

எப்போதும் சல சல வென இருக்கும் மெயின் பிளாக் அமைதியாக இருந்தது,
அங்கே சிலர் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்

அப்போது அந்த பக்கம் இருந்த அறிவிப்பு பலகையை உற்று நோக்கினேன், கல்லூரியை பற்றி சில அறிவிப்புகள் இருந்தது

அவள் வரும் வரை இதையாவது படிக்கலாம் என்று ஒவ்வொன்றாக
படித்து கொண்டிருந்தேன்

கல்லூரி நிர்வாகம் சார்பாக ஒரு அறிவிப்பு இருந்தது....


தேடல் தொடரும்...

Saturday, February 4, 2012

காதலர் தினம்
ஆம் கூறினார்கள் காதலர் தினம் 
வெகு விரைவில் வரப்போகிறது என்று 
தாய் தந்தையின் பிறந்த தேதி தெரியாத
இந்த மடையர்கள்!!!

வெட்கி தலைகுனி இப்படி ஒரு நாளை 
நீ கொண்டாடுவதற்காக 

நான் ஒன்றும் காதலுக்கு எதிரி இல்லை 
காதலின் பெயரை கெடுப்பவர்களை 
தான் குறை கூறுகிறேன் 

இன்று உன்னுடன் இருக்கும் ஒருத்திக்காக 
காதலர் தினத்தை கொண்டாடதே 

இன்று உன்னுடன் இருக்கும் அந்த காதலி 
நாளை அவள் கணவனுடன் கொண்டாடுவாள்,
நீ உன் மனைவியுடன் கொண்டாடுவாய் ....


அவனும் மனிதன் தானே - 2 பாகம்

முந்தைய பாகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்
http://kangalumkavipaduthe.blogspot.in/2012/02/blog-post.html


சந்துரு அன்று முழுவதும் எதையோ பறிகொடுத்தவன் போல அலைந்து
கொண்டிருந்தான், கடைசியாக அந்த பெரியவரை மருத்துவமனைக்கு 
சென்று பார்த்து விட வேண்டும் என முடிவு செய்தான்

அவரை எந்த மருத்துவமனையில் அனுமதித்து இருகிறார்கள் என்று
ஒரு வழியாக அந்த மருத்துவமனையை வந்தடைந்தான்

" மேடம், இன்னைக்கு காலையில அசோக் பில்லர் சிக்னல் கிட்ட அடிபட்டவர
இங்க தான் சேர்த்து இருக்காங்க அவர் எந்த வார்டு மேடம்"

"பெயரை சொல்லுங்க சார், இன்னைக்கு மட்டும் காலையில 3 அடிபட்ட
கேஸ் வந்திருக்கு"

"அவர் பெயர் தெரியலை?"

"பெயர் தெரியாம நான் என்ன சார் பண்ண முடியும்"

"இல்ல மேடம், அவருக்கு ஒரு 45லிருந்து 50 வயசு இருக்கும், காலையில
பஸ்ல இருந்து கீழ விழுந்து அடிபட்டுட்டார்"

"ஓ! அந்த கேசா, ராம கிருஷ்ணன் அவர் மதியமே இறந்துட்டார்"

எனக்கு தூக்கி வாரி போட்டது

"பிரேத பரிசோதனை, கட்டிடத்திற்கு போங்க"

" நன்றி மேடம்"

பிரேத பரிசோதனை கட்டிடத்திற்கு ஒரு வழியாக வந்தடைந்தேன்,
அந்த இடமெங்கும் ஒரே அழுகை சத்தம், அங்கு நின்று கொண்டிருந்த
அனைவரின் முகத்திலும் இழக்க கூடாததை இழந்து தவிக்கின்ற தவிப்பு
தெரிந்தது


நான் அருகில் இருந்த கடையில் நின்று கொண்டிருந்தேன்,
மெதுவாக அந்த டீக்கடை காரரிடம் பேச்சுகொடுத்தேன்

"என கேஸ் தலைவா"

"பெருசு ஒன்னு, பஸ்ல இருந்து விழுந்து மண்டைய போட்டுடுச்சு"

அப்போது அருகில் இருந்த சிலர் பேசுவது என் காதில் விழுந்தது

"அவர் மகன் மட்டும் சரியான நேரத்திற்கு வந்திருந்தா, இந்நேரம்
பிளைசிருப்பர்"

"பாவம் நல்ல மனுஷன், இவருக்கு இவன் மகன் தான் எமனா இருக்கணும்னு
விதி இருந்திருக்கு அத யாரால மாத்த முடியும்"

பிணவறையின் ஒரு ஓரத்தில் , அவர் மகன் குத்துக்கல் ஆட்டம்
நின்று கொண்டிருந்தான், அவன் கண்களில் அவன் தந்தை இறந்ததற்கான
எந்த ஒரு அறிகுறியும் இல்லை

தன்னால் தான் தான் தந்தை இறந்தார் என்பதற்கான ஒரு உள்ளுணர்வோ,
உறுத்தலோ இல்லை இதற்கும் மேல் அவன் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட விடவில்லை

இப்படியா மனம் கல்லாகி விட்டது இந்த மனிதனுக்கு???

அந்த மனிதரின் உடல் வெளியில் கொண்டு வரப்பட்டு அமரர் ஊர்தியில்
ஏற்றப்பட்டது
(எவ்வளோ பெரிய மனிதனாக இருந்தாலும் எவ்வளோ விலை மதிக்க
முடியாத அளவுக்கு செல்வங்கள், வாகனங்கள் வைத்திருந்தாலும் அவரின் கடைசி வண்டி இந்த ஊர்வலம் போல தான் இருக்கும் போல)

அவரின் மனைவி, மகள் அழுவதை பார்த்தல் கல் மனதையும் கரைத்து விடும்
காட்சி அது

என் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது,
காலையில் சந்தித்த ஒரு மனிதருக்காக கண்ணீர் விட்டு கொண்டிருக்கிறேன்

அடுத்த நிமிடம் நிச்சயம் இல்லாத வாழ்க்கை என அன்று தெரிந்து கொண்டேன்


அவரது உடலை வண்டியில் ஏற்றி விட்டு அதற்கான பணத்தை
அந்த பெண்மணியிடம் பெற்று கொண்டனர், அவர் இருக்கும் இந்த
நிலைமையில் எப்படி தான் அவர்களுக்கு பணம் வாங்க மனம் வருகிறதோ
என்று எனக்கு தெரியவில்லை

அது சரி, இறப்பு என்பது நமக்கு வலி
ஆனால், அது அவர்களுக்கு தொழில்
இப்படி ஒரு நாளைக்கு எத்தனை பெயரை பார்ப்பார்கள் என்று மனம்
நினைத்துக்கொண்டது

அந்த நேரத்தில் எனது அழைப்பு மணி ஒலித்தது,
எனது அம்மா தான் அழைத்திருந்தார்கள்

"சொல்லுங்கமா'

"எங்கடா இருக்க, ஆபீஸ் முடிஞ்சதா இல்லையா இன்னும் ஆபீஸ்ல என்ன பண்ணிக்கிட்டு இருக்க"

பதில் சொல்வதற்கு முன்னாடியே , அடுத்தடுத்த கேள்விகளை தொடுத்தார்கள், உண்மையை சொன்னால் பிரச்சனை தான் என்று
உணர்ந்து

"இதோ கிளம்பிட்டேன், இன்னைக்கு கொஞ்சம் வேலை அதிகம் என்று சொல்லிக்கொண்டே"

அந்த ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று நினைத்து கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்தேன்

இரவு தாமதமாக தான் வீட்டுக்கு சென்றேன்


அம்மா ஆர்வமாக டி.வி பார்த்து கொண்டிருந்தாள் நான் வந்ததை கூட
கவனிக்க நேரமில்லாமல், இரும்புவது போல் பாவல செய்தேன்

"வந்துடீங்களா, பொய் வேலைக்காரிய சாப்ப்பாடு போடா சொல்லுங்க"

என்று என் தந்தை வந்துவிட்டதாக எண்ணி கூறினாள்
அப்போது தான் உணர்ந்தேன் வீட்டில் சீரியல் பார்க்கும் போது கணவன்
வந்தால் இந்த நிலைமை தான் என்று பட்டிமன்றம் ஒன்றில் கேட்டதாக
நியாபகம்

அது எவ்வளவு உண்மை என்று அன்று உணர்ந்தேன்

"அம்மா, நான் வந்தது கூட தெரியலையா அவ்வளோ ஆர்வமா
டிவி பார்த்துகிட்டு இருக்க"

"கோவிச்சுக்காதடா, இப்போதான் கவிதா வீட்டுக்கு வந்தா அதான் அவ
பேசுறத கேட்டுகிட்டே நேரம் போறதே தெரியல"

"யாருமா அது கவிதா, நம்ம வீட்டுக்கு எதுக்கு வந்தாங்க"

"டேய் நான் சொன்னது திருமதி செல்வமல வர்ற கவிதாடா"
கோவம் உச்சன் தலையில் இருந்து உள்ளங்கால் வரைக்கும் ஏறியது
என்னை நானே கேட்டு கொண்டேன், எப்போது தான் இவர்கள்
திருந்துவார்களோ என்று

"சரி, போய் கை, கால் அலம்பிட்டுவா தோசை ஊத்தி வைக்குறேன்"

"அம்மா, நான் பொய் முதல்ல குளிசுட்டே வரேன்"

"என்னடா, இன்னைக்கு புதுசா குளிக்க இந்த நேரத்துல குளிக்க போற"

"இல்ல உடம்பெல்லாம் கசகசன்னு இருக்கு அதான், குளிச்சுட்டு வரேன்"

"சரி போய் குளிச்சிட்டு சீக்கிரம் வா, நான் அடுப்படிக்கு போறேன்"

"ஹீட்டர் வேலை செய்யல மறந்துடாத"

"ம்ம், நியாபகம் இருக்கு"

குளித்துவிட்டு அம்மா சுட்டு தந்த தோசையை சாபிட்டுகொண்டு இருந்ததில்
எனக்கு அந்த நியாபகமே வரவே இல்லை
ஹால்-ல் உட்காந்து அம்மாவுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டு அங்கேயே
உறங்கி விட்டேன்

அதன் பின் மறுநாள் அலுவலகத்தில் வேலை அதிகம் இருந்ததால்
அப்படியே சென்று விட்டது


இவ்வாறாக ஒரு மாதம் கடந்து விட்டது .....

இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் எனக்கு ப்ரோமோசன், கார் என
என்னுடைய வாழ்கை தரத்தை இன்னும் ஒரு படி உயர்த்தி கொண்டேன்

நாளை காலை ஒரு இன்டர்வியூ அதை நான் தான் நடத்த வேண்டும்
என என்னுடைய முதலாளி உத்தரவு, எனக்கு இதில் அனுபவம் இல்லை
என்று சொன்ன போது கூட அவர் என்னை விடுவதாக இல்லை

அவர் எனக்கு உதவியாக அவரது செக்ரடேரி ஷீலா எனக்கு
உதவியாக இருப்பாள் என்று அவளை அனுப்புவதாக கூறினார்
நானும் தலையை ஆட்டி வைத்தேன்

 இன்டர்வியூக்கு வரும் நபர்களின் பெயர் பட்டியல் என் மேஜை-ல்
இருந்தது அதில் ஒவ்வொரு பெயராக வாசிக்க தொடங்கினேன்

அதில் மொத்தம் 20 நபர்களின் பெயர்கள் இருந்தது,
12 பெண்கள் 8 ஆண்கள்

அப்போது எதாவது தெரிந்த பெயர் இருக்கிறதா என்று தேட துவங்கினேன்
தேடல் தொடரும்...


அவனும் மனிதன் தானே - 1 பாகம்


பன்முகம் கொண்ட மனிதர்கள் இந்த சென்னையில் இருகிறார்கள்
அவர்கள் எல்லோரிடமும் நாம் பேசியதோ பழகியதோ இல்லை, 
அவ்வாறு இரு வெவ்வேறு முகம் கொண்ட சென்னை வாசிகளின் கதை இது,

மணி காலை 6 
சென்னை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக விடிந்து கொண்டிருக்கிறது

பேப்பர் போடும் சிறுவனில் இருந்து மெரினா கடற்கரையில் உடம்பில் சர்க்கரையின் அளவை குறைக்க நடந்து கொண்டிருக்கும் பெரியவர்கள் வரை
அந்த நாளை துவக்கி கொண்டிருக்கிறார்கள்

6 மணி: நபர் ஒன்று 

தலைக்கு மேல் காதுக்குள் இரையும் படி அலராம் அடித்தாலும் அதை அணைத்து விட்டு தூங்கும் அன்பர்களுக்கு மத்தியில் இவர் சற்று வித்யாசமானவர் 

அலாரம் ஒலிக்கும் முன்னரே எழுந்து அதை அணைத்து விட்டு மீண்டும் உறங்கும் உயர்ந்த மனிதர் 

இவர் துயில் எழும் முன்னர் இவரை பற்றி சில:

தனக்கென்று வாழ்வில் எந்த ஒரு லட்சியமும் இல்லாத 23 வயது வாலிபன், 
கடனே என்று பொறியியல் படித்து விட்டு எந்த பயனும் இல்லாமல் 
பெற்றோரின் காசில் தன் வண்டிக்கு பெட்ரோல் போட்டு கொண்டிருக்கும் 
மிக சாதாரண நபர்களில் இவனும் ஒருவன்

மிடில் கிளாஸ் வாழ்க்கை என கடைசி வரை தலையில் எழுதபடா விதி இருக்கும் சாதாரண பெற்றோர்கள் இவனை என்ன தான் செய்வார்கள் பாவம்

மனதிற்குள் மன்மதன் என்கிற நினைப்பு,

இவர் பெயரை சொல்ல மறந்து விட்டேனே இவர் தான் சுனில் என்கிற 
சுனில் குமார்

6 மணி: நபர் இரண்டு 

"காலையில் எழுவதில் 10 நிமிடம் கழித்து எழுவோம் என நினைக்கிறோமோ  அப்போது தான் ஆரம்பிக்கிறது அன்றைய
தினத்தின் முதல் தோல்வி" 

என்ற கொள்கையினை பின்பற்றுபவன்.

இவர் எழுந்து தனது காலை பணிகளை முடிக்கும் முன் இவரை பற்றி சில:

சந்துரு என்கிற சந்திர சேகர், பொறியியல் படிப்பை முடித்து விட்டு முடித்த கையொடு கல்லூரியே இவனுக்கு வேலை கிடைக்க ஏற்பாடு செய்தது 
உயர்தர நடுத்தர வர்க்கம், வீட்டில் நல்ல வசதி வாய்ப்புகள் இருந்தாலும் 
மகன் சொந்த காலில் நிற்க வேண்டும் என்று ஆசை படும் பெற்றோர்களில்
இவர்களுக்கும் இடம் உண்டு

ஒரு சின்ன கம்பனியில் வேலைக்கு சேர்ந்து 6 மாதம் தான் இருக்கும்
அங்கு தனக்கென்று ஒரு நல்ல பெயரை உருவாக்கி வைத்து கொண்டான் 

"ச்சே" என்று சொல்கிற அளவுக்கு கேட்ட பழக்கவழக்கங்கள் இல்லை என்றாலும் புகை பிடிக்கும் பழக்கம் உண்டு 

சந்துரு என்றால் அப்படி அந்த பெயரில் என்ன தான் இருக்கிறதோ தெரியவில்லை பெண்கள் இவன் பெயரை சொல்லி அழைத்து இவனையே
சுற்றி சுற்றி வருவார்கள்

ஆனால் அவன் யாரையும் கண்டு கொள்வது கிடையாது,
அவனுக்கு பெண்கள் என்ற பெயரை கேட்டாலே வெறுப்பு தான் வரும்
அதனால் தான் என்னவோ இவனையே சுற்றி வந்தார்கள்

நம்மூர் பெண்களை பற்றி சொல்லவா வேண்டும்,
யார் அவர்கள் பின்னல் சுற்றுபவர்களை சீண்ட கூட மாட்டார்கள்,
அவர்களை கண்டு கொல்லாத பையனை நினைத்து உருகுவார்கள்

9  மணி : அசோக் பில்லர் பஸ் ஸ்டாப்

இந்த உலகத்தில் எதவுமே நடக்காதது போல் காதில் வயரை மாட்டிகொண்டு அவர்களை அழைத்து செல்லும் வாகனத்திற்காக காத்திருக்கும் சாப்ட்வேர் பெண்மணிகள்,

கவலை என்றால் என்ன வென்று கேட்கும் வயதில் முதுகில் பொதி தூக்கும் பள்ளி செல்லும் சிறுவர்கள்,

கடமையே கண் போன்றது என்று தான் வேலையில் கவனமாக இருக்கும்
அதாவது முன்னாடி நிற்கின்ற சிவப்பு சுடிதார் எங்கு வேலை பார்க்கிறாள்,
மஞ்சள் சுடிதார் என் இன்னும் வரவில்லை என்று தனது வேலையை பார்த்து
கொண்டிருக்கும் இளைஞர் பட்டாளம்,

சென்னை வாழ்கையை நொந்து கொண்டு வேலைக்கு செல்லும் பெருசுகள் என அனைவருக்கும் இடம் கொடுக்கும் பேருந்து நிறுத்தம் அது,

சந்துரு செல்லும் D70 பேருந்து 9 30  மணிக்கு அந்த பேருந்து நிறுத்தத்தை வந்தடையும் அவன் வழக்கம் போல 9 15 மணிக்கு வந்தடைந்தான்

வழக்கம் போல் அன்றும் அனைவரும் தம் பணிகளை சிறப்பாக செய்து
கொண்டிருந்தனர்

சந்துருவின் அருகில் ஒரு 45 வயது மதிக்கதக்க ஒரு நபர் அவன் அருகில்
நின்று கொண்டிருந்தார்

அவர் ஏதோ பதட்டத்துடன் நிற்பது மட்டும் அவனுக்கு புரிந்தது,
அந்த நேரம் நான் வழக்கமாக செல்லும் பேருந்து வந்தது 

வழக்கம் போல இன்றும் கூட்டம் கட்டுகடங்காமல் இருந்தது
பாவம் நடத்துனர் ஏன் டா?? இந்த வேலைக்கு வந்தோம் என்கிற ஏக்கம்
அவர் கண்களில் இருந்தது

நான் பேருந்தில் உள்ளே இடிச்சு புடிச்சு உள்ளே நுழைந்துவிட்டேன்,
அதே பேருந்தில் அவரும் அவசரமாக ஏற முற்பட்டார்
அதற்குள் நடத்துனர் விசில் அடிக்கும் முன்பே ஓட்டுனர் பேருந்தை
இயக்க தொடங்கி விட்டார்

அதே நேரத்தில் ஒரு காலை மட்டும் படியில் வைத்து நிற்று கொண்டிருந்த 
அவர் நிலை தடுமாறி தலை குப்பற கீழ விழுந்தார்

அவர் தலையில் அடிபட்டு ரத்தம் சொட்ட ஆரம்பித்தது,
அந்த பெரியவர் அரை மயக்கதிற்கே சென்றார் 

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவம் அந்த இடத்தில் இருந்த
அனைவரையும் பதறவைத்தது 

நடத்துனர் சுதாரித்து கொண்டு விசில் அடிக்க வண்டி நின்றது
நடந்தது என்னவென்று புரியாமல் பேருந்தினுள் அகப்பட்ட புழுக்களை போல
உள்ளே நின்று கொண்டிருந்த அனைவரின் கவனமும் ஒரு சேர அந்த 
இடத்தை ஆக்கிரமித்தது

படியில் நின்று கொண்டிருந்த இளைஞர்கள்,
அவசரமாக இறங்கினார்கள் நானும் செய்வதறியாது அவர் அருகில்
சென்றேன் 

இந்த பதட்டமான சூழ்நிலையில் பேருந்தில் உள்ள அனைவரும் 
ஓட்டுனரை பல்வேறு மொழிகளில் திட்டி தீர்த்து கொண்டிருந்தனர்

அதற்குள் அந்த இடத்தில் போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஓடி வர
அந்த இடமே ஏதோ விபரிதம் நடந்து விட்டது என அனைவரும் 
அறியும் வகையில் இருந்தது 

அந்த அதிகாரி தனது அழைபேசி எடுத்து தொடர்பு கொண்டு,
அம்புலன்சை அனுப்பி வைக்கும்மாறு உத்தரவிட்டார்

அதற்குள் அருகமையில் இருத்த தீஅணைப்பு நிலையத்தில் இருந்த 
முதலுதவி பெட்டியின் மூலம் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது 

இருப்பினும் அவர் தலையில் இருந்து வழிகின்ற ரத்தம் நின்றபாடில்லை 

அடுத்த 5 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் அந்த இடத்தை வந்தடைந்தது

அவர்கள் அவரை அதில் ஏற்றி விட்டு கொண்டு சென்றனர்

அந்த காவல் அதிகாரி அந்த பேருந்தை ஓரம்கட்டி, அந்த நடத்துனர்
மற்றும் ஓட்டுனரை போலீஸ் அதிகாரி விசாரிக்க தொடங்கினர்


அதற்குள் வேறு பேருந்து வந்துவிடவே நான் அதில் ஏறி கொண்டேன்
என்னை போல சிலரும் அந்த பேருந்தில் இருந்து இறங்கி வேறு பேருந்தில்
ஏறி கொண்டனர்

நான் வழக்கம் போல அலுவலகத்திற்கு சென்று எனது
அன்றாட அலுவல்களை செய்ய துவங்கினேன், ஏனோ மனம்
அதில் லயிக்கவில்லை

இந்த சம்பவம் இனி எவனை என்ன செய்யபோகின்றது என்று
பொறுத்திருந்து பாப்போம் 

தேடல் தொடரும்...