Saturday, February 4, 2012

அவனும் மனிதன் தானே - 2 பாகம்

முந்தைய பாகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்
http://kangalumkavipaduthe.blogspot.in/2012/02/blog-post.html


சந்துரு அன்று முழுவதும் எதையோ பறிகொடுத்தவன் போல அலைந்து
கொண்டிருந்தான், கடைசியாக அந்த பெரியவரை மருத்துவமனைக்கு 
சென்று பார்த்து விட வேண்டும் என முடிவு செய்தான்

அவரை எந்த மருத்துவமனையில் அனுமதித்து இருகிறார்கள் என்று
ஒரு வழியாக அந்த மருத்துவமனையை வந்தடைந்தான்

" மேடம், இன்னைக்கு காலையில அசோக் பில்லர் சிக்னல் கிட்ட அடிபட்டவர
இங்க தான் சேர்த்து இருக்காங்க அவர் எந்த வார்டு மேடம்"

"பெயரை சொல்லுங்க சார், இன்னைக்கு மட்டும் காலையில 3 அடிபட்ட
கேஸ் வந்திருக்கு"

"அவர் பெயர் தெரியலை?"

"பெயர் தெரியாம நான் என்ன சார் பண்ண முடியும்"

"இல்ல மேடம், அவருக்கு ஒரு 45லிருந்து 50 வயசு இருக்கும், காலையில
பஸ்ல இருந்து கீழ விழுந்து அடிபட்டுட்டார்"

"ஓ! அந்த கேசா, ராம கிருஷ்ணன் அவர் மதியமே இறந்துட்டார்"

எனக்கு தூக்கி வாரி போட்டது

"பிரேத பரிசோதனை, கட்டிடத்திற்கு போங்க"

" நன்றி மேடம்"

பிரேத பரிசோதனை கட்டிடத்திற்கு ஒரு வழியாக வந்தடைந்தேன்,
அந்த இடமெங்கும் ஒரே அழுகை சத்தம், அங்கு நின்று கொண்டிருந்த
அனைவரின் முகத்திலும் இழக்க கூடாததை இழந்து தவிக்கின்ற தவிப்பு
தெரிந்தது


நான் அருகில் இருந்த கடையில் நின்று கொண்டிருந்தேன்,
மெதுவாக அந்த டீக்கடை காரரிடம் பேச்சுகொடுத்தேன்

"என கேஸ் தலைவா"

"பெருசு ஒன்னு, பஸ்ல இருந்து விழுந்து மண்டைய போட்டுடுச்சு"

அப்போது அருகில் இருந்த சிலர் பேசுவது என் காதில் விழுந்தது

"அவர் மகன் மட்டும் சரியான நேரத்திற்கு வந்திருந்தா, இந்நேரம்
பிளைசிருப்பர்"

"பாவம் நல்ல மனுஷன், இவருக்கு இவன் மகன் தான் எமனா இருக்கணும்னு
விதி இருந்திருக்கு அத யாரால மாத்த முடியும்"

பிணவறையின் ஒரு ஓரத்தில் , அவர் மகன் குத்துக்கல் ஆட்டம்
நின்று கொண்டிருந்தான், அவன் கண்களில் அவன் தந்தை இறந்ததற்கான
எந்த ஒரு அறிகுறியும் இல்லை

தன்னால் தான் தான் தந்தை இறந்தார் என்பதற்கான ஒரு உள்ளுணர்வோ,
உறுத்தலோ இல்லை இதற்கும் மேல் அவன் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட விடவில்லை

இப்படியா மனம் கல்லாகி விட்டது இந்த மனிதனுக்கு???

அந்த மனிதரின் உடல் வெளியில் கொண்டு வரப்பட்டு அமரர் ஊர்தியில்
ஏற்றப்பட்டது
(எவ்வளோ பெரிய மனிதனாக இருந்தாலும் எவ்வளோ விலை மதிக்க
முடியாத அளவுக்கு செல்வங்கள், வாகனங்கள் வைத்திருந்தாலும் அவரின் கடைசி வண்டி இந்த ஊர்வலம் போல தான் இருக்கும் போல)

அவரின் மனைவி, மகள் அழுவதை பார்த்தல் கல் மனதையும் கரைத்து விடும்
காட்சி அது

என் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது,
காலையில் சந்தித்த ஒரு மனிதருக்காக கண்ணீர் விட்டு கொண்டிருக்கிறேன்

அடுத்த நிமிடம் நிச்சயம் இல்லாத வாழ்க்கை என அன்று தெரிந்து கொண்டேன்


அவரது உடலை வண்டியில் ஏற்றி விட்டு அதற்கான பணத்தை
அந்த பெண்மணியிடம் பெற்று கொண்டனர், அவர் இருக்கும் இந்த
நிலைமையில் எப்படி தான் அவர்களுக்கு பணம் வாங்க மனம் வருகிறதோ
என்று எனக்கு தெரியவில்லை

அது சரி, இறப்பு என்பது நமக்கு வலி
ஆனால், அது அவர்களுக்கு தொழில்
இப்படி ஒரு நாளைக்கு எத்தனை பெயரை பார்ப்பார்கள் என்று மனம்
நினைத்துக்கொண்டது

அந்த நேரத்தில் எனது அழைப்பு மணி ஒலித்தது,
எனது அம்மா தான் அழைத்திருந்தார்கள்

"சொல்லுங்கமா'

"எங்கடா இருக்க, ஆபீஸ் முடிஞ்சதா இல்லையா இன்னும் ஆபீஸ்ல என்ன பண்ணிக்கிட்டு இருக்க"

பதில் சொல்வதற்கு முன்னாடியே , அடுத்தடுத்த கேள்விகளை தொடுத்தார்கள், உண்மையை சொன்னால் பிரச்சனை தான் என்று
உணர்ந்து

"இதோ கிளம்பிட்டேன், இன்னைக்கு கொஞ்சம் வேலை அதிகம் என்று சொல்லிக்கொண்டே"

அந்த ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று நினைத்து கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்தேன்

இரவு தாமதமாக தான் வீட்டுக்கு சென்றேன்


அம்மா ஆர்வமாக டி.வி பார்த்து கொண்டிருந்தாள் நான் வந்ததை கூட
கவனிக்க நேரமில்லாமல், இரும்புவது போல் பாவல செய்தேன்

"வந்துடீங்களா, பொய் வேலைக்காரிய சாப்ப்பாடு போடா சொல்லுங்க"

என்று என் தந்தை வந்துவிட்டதாக எண்ணி கூறினாள்
அப்போது தான் உணர்ந்தேன் வீட்டில் சீரியல் பார்க்கும் போது கணவன்
வந்தால் இந்த நிலைமை தான் என்று பட்டிமன்றம் ஒன்றில் கேட்டதாக
நியாபகம்

அது எவ்வளவு உண்மை என்று அன்று உணர்ந்தேன்

"அம்மா, நான் வந்தது கூட தெரியலையா அவ்வளோ ஆர்வமா
டிவி பார்த்துகிட்டு இருக்க"

"கோவிச்சுக்காதடா, இப்போதான் கவிதா வீட்டுக்கு வந்தா அதான் அவ
பேசுறத கேட்டுகிட்டே நேரம் போறதே தெரியல"

"யாருமா அது கவிதா, நம்ம வீட்டுக்கு எதுக்கு வந்தாங்க"

"டேய் நான் சொன்னது திருமதி செல்வமல வர்ற கவிதாடா"
கோவம் உச்சன் தலையில் இருந்து உள்ளங்கால் வரைக்கும் ஏறியது
என்னை நானே கேட்டு கொண்டேன், எப்போது தான் இவர்கள்
திருந்துவார்களோ என்று

"சரி, போய் கை, கால் அலம்பிட்டுவா தோசை ஊத்தி வைக்குறேன்"

"அம்மா, நான் பொய் முதல்ல குளிசுட்டே வரேன்"

"என்னடா, இன்னைக்கு புதுசா குளிக்க இந்த நேரத்துல குளிக்க போற"

"இல்ல உடம்பெல்லாம் கசகசன்னு இருக்கு அதான், குளிச்சுட்டு வரேன்"

"சரி போய் குளிச்சிட்டு சீக்கிரம் வா, நான் அடுப்படிக்கு போறேன்"

"ஹீட்டர் வேலை செய்யல மறந்துடாத"

"ம்ம், நியாபகம் இருக்கு"

குளித்துவிட்டு அம்மா சுட்டு தந்த தோசையை சாபிட்டுகொண்டு இருந்ததில்
எனக்கு அந்த நியாபகமே வரவே இல்லை
ஹால்-ல் உட்காந்து அம்மாவுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டு அங்கேயே
உறங்கி விட்டேன்

அதன் பின் மறுநாள் அலுவலகத்தில் வேலை அதிகம் இருந்ததால்
அப்படியே சென்று விட்டது


இவ்வாறாக ஒரு மாதம் கடந்து விட்டது .....

இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் எனக்கு ப்ரோமோசன், கார் என
என்னுடைய வாழ்கை தரத்தை இன்னும் ஒரு படி உயர்த்தி கொண்டேன்

நாளை காலை ஒரு இன்டர்வியூ அதை நான் தான் நடத்த வேண்டும்
என என்னுடைய முதலாளி உத்தரவு, எனக்கு இதில் அனுபவம் இல்லை
என்று சொன்ன போது கூட அவர் என்னை விடுவதாக இல்லை

அவர் எனக்கு உதவியாக அவரது செக்ரடேரி ஷீலா எனக்கு
உதவியாக இருப்பாள் என்று அவளை அனுப்புவதாக கூறினார்
நானும் தலையை ஆட்டி வைத்தேன்

 இன்டர்வியூக்கு வரும் நபர்களின் பெயர் பட்டியல் என் மேஜை-ல்
இருந்தது அதில் ஒவ்வொரு பெயராக வாசிக்க தொடங்கினேன்

அதில் மொத்தம் 20 நபர்களின் பெயர்கள் இருந்தது,
12 பெண்கள் 8 ஆண்கள்

அப்போது எதாவது தெரிந்த பெயர் இருக்கிறதா என்று தேட துவங்கினேன்




தேடல் தொடரும்...


No comments:

Post a Comment