Saturday, March 17, 2012

"கடைசி சந்திப்பு" - சிறுகதை

                        காவ்யா அழகான மனைவி, குடும்ப தலைவி, அம்மா என ஒவ்வொருவரின் தேவைகளையும் நிறைவேற்றி கொண்டிருக்கும் ஒரு சராசரி குடும்ப பெண் வாழ்வில் எந்த விதமான குறையும் இல்லை என்று எவராலும் கூற முடியாது குறைகளை மறைத்து கொண்டு வாழ்வினை இன்ப மயமாக மாற்றுவதில் தான் வாழ்கையின் சுவாரசியம் உள்ளது என்பதனை கற்றுக்கொண்ட நடுத்தர வர்க்கத்தினர்


"அளவான குடும்பம், தெவிட்டாத இன்பம்" என்ற எண்ணம் கொண்டவன் சரவணன் , திருமணதிற்கு பிறகு காவ்யா மற்றும் குழந்தை தான் உலகம் என்று உள்ளவன்


இவர்களின் திருமணம் பெற்றோர்களால் நிச்சியக்கபட்ட திருமணமே
ஆனால் இவர்கள் வாழும் விதத்தினை மற்றவர்கள் பார்த்து உங்களுடையது காதல் திருமணம் தானே? என்று நெறைய பேர் அவர்களிடம் கேட்டுள்ளனர்
அந்த அளவிற்கு அன்யோன்யமும், காதலும் இவர்களின் வாழ்வில் நிறைத்திருந்தது


சரவணின் அலுவலகத்தில் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், அதை வீட்டிற்கு வந்தவுடனே மறக்க செய்துவிடுவாள் தன்னுடைய என் இன்முகத்தால்


அன்றும் அது போல தான் அலுவலகத்தில் இருந்து வீடு வந்து சேர்ந்தான்
படைத்தலைவனை எதிர்பார்த்து காத்திருக்கும் தலைவியை போல, வீட்டின் வாசலையே உற்று நோக்கி கொண்டிருக்கும் காவ்யா அன்று அங்கு இல்லை

சரி, ஏதோ வேலையாக இருப்பாள் என்று எண்ணி கொண்டான்

 வீட்டின் உள்ளே அவன் எப்போதும் நுழைந்ததும் துண்டினை அவன் கையில் கொடுத்து முகம், கை, கால் கழுவி விட்டு உள்ளே வாங்க என்று அன்பு கட்டளையும் இன்று இல்லை


இவளுக்கு இன்று என்னவாகி விட்டது என்று வீடு முழுவதும் அவளை தேடினான், வீட்டின் மாடி, உற்றம் என அணைத்து இடங்களையும் தேடி கடைசியாக வீட்டின் பின் புறம் தேடினான்


வீட்டின் கிணற்றின் சுற்று சுவரின் மீது சாய்ந்து சோகமாக அமர்ந்திருந்தாள்

காவ்யாவின் முகத்தில் இருக்கும் அக்மார்க் புன்னகை அன்று இல்லை, மாறாக அவள் கன்னத்தில் உள்ள வடுக்கள் அவள் அழுததற்கான அடையாளங்களை வெளிப்படுத்தி கொண்டிருந்ததுசரவணன் அவள் அருகில் சென்று அவள் தோலை பிடித்து உலுக்கினான்
எந்த வெளிப்பாடும் இல்லை அவளிடம்

"காவ்யா, காவ்யா"

என்று மீண்டும் ஒரு முறை அவள் பெயரினை கூறி அவளை அழைத்தான்

பின்பு அவளின் நினைவுகளில் இருந்து விடுபட்டவளாய்

" வந்துடீங்களா,  எப்போ வந்தீங்க?"

என்று அடுத்தடுத்து கேள்விகளை அடுக்கினாள்

" நான் வந்தது இருக்கட்டும், உனக்கு என்ன ஆச்சு, ஏன் இப்படி இங்க வந்து தனியா உட்காந்திருக்க?"

" அது ஒன்னும் இல்லை, சும்மா தான்"

" உண்மையை சொல்லுமா, என்ன ஆச்சு உனக்கு?"

" இல்லை என்னோட அம்மா நினைப்பாவே இருக்கு"

சரவணக்கு தெரியும் அவளுக்கு அவள் அம்மா என்றல் உயிர், பாவம் நாம் யார் மேல் அதிகம் அன்பு வைத்துள்ளோமோ அவர்களின் உயிரை தான்
கடவுள் மிகவும் சீக்கிரமாக எடுத்து கொள்கிறேன்

காவ்யாவிற்கு எப்படி சமாதனம் சொல்வது என்று தெரியவில்லை, இருப்பினும் தன் அன்பு அவளை சரிக்கட்டும் என்பதில் சரவணனுக்கு
சந்தேகமில்லை

அவளை வீட்டினுள் அழைத்து சென்று அவளை ஒரு வழியாக சமாதனம் செய்தான், அவளுக்கு தோசை ஊற்றி கொடுத்து, பின்பு பாத்திரங்களை கழுவி படுக்கை அறைக்கு வந்தான் பின்பு காவ்யாவின் தலையை தன்னுடைய மடி மேல் வைத்து தாயின் அரவணைப்பில் தூங்கும் குழந்தையை போல அவளை படுக்க வைத்து காவ்யாவை தூங்க வைத்த சந்தோஷத்தில் தானும் தூங்கினான்


ஆனால், காவ்யாவோ கண்களை மட்டுமே மூடிக் கொண்டிருந்தாள்
சரவணனை போல தான் ஒவ்வொரு பெண்ணும் தனக்கு கணவன் வரவேண்டும் என்று அணைத்து பெண்களும் நினைப்பார்கள்,

கடவுளோ அந்த கொடுப்பினையோ அனைவருக்கும் கொடுப்பதில்லை
இப்படிப்பட்ட கணவன் தனக்கு வாய்த்தது உண்மையில் தன்னுடைய அதிர்ஷ்டமே என்று எண்ணிக்கொண்டாள்

இப்படி அன்பாக இருக்கும் சரவணனிடம் உண்மையை சொல்லலாமா, வேண்டாமா என்று அவள் மனதில் ஓடும் போராட்டத்தினை வார்த்தைகளால்
விவரிக்க முடியாது

இப்படியான கடும் மன அழுத்தத்திலும் அவள் எப்போது உறங்கினாள் என்று அவளுக்கு நினைவில்லை


மறுநாள் காலை சரவணனை அலுவலகம் அனுப்பிவிட்டு, தனது வழக்கமான வீட்டு வேலைகளை பார்க்க துவங்கினாள், ஹாலில் இருந்து தொலைபேசி
ஒழித்தது


அவளது மனம் படபக்க ஆரம்பித்தது, நேற்று வந்த அதே தொலைபேசி அழைப்பாக இருக்குமோ என்று ஒரு கணம் ஸ்தம்பித்து நின்று விட்டாள்

அதற்குள் தொலை பேசி நின்று விட்டது, நிம்மதி பேரு மூச்சு விட்டாள்

மீண்டும் தொலைபேசி ஒலித்தது இந்த முறை தொலைபேசியை எடுப்பதை தவிர அவளுக்கு வேறு வழி இல்லை, அப்போது அவளின் நினைவுகளுக்கு வந்தது தனது கைபேசி இரண்டு நாட்களாக வேலை செய்ய வில்லை என்று அதனால் ஒரு வேலை அவள் தந்தையாக இருக்குமோ என்று எண்ணினாள்


மெதுவாக தொலைபேசியை எடுத்து காதில் வைத்தாள்


தொலைபேசியை எடுத்து காதில் வைத்தவுடனே தெரிந்து விட்டது நேற்று அவள் கேட்ட அதே குரல் தான் என்று மறுமுனையில் அந்த குரலை மட்டும் கேட்டுகொண்டிருந்தாள் இவள் பதில் ஏதும் தெரிவிக்கவில்லை


அழைப்பினை முழுமையாக கேட்டுவிட்டு சட்டென்று சரிந்து விழுந்தாள்,

அடுத்த நிமிடம் அவளுக்கு உலகமே நின்று விடும் போல இருந்தது

அன்று வழகதிற்காக மாறாக சரவணன் வெகு விரைவாக வீட்டிற்கு வந்தான்
வீட்டுக்குள் வந்தவனுக்கு காவ்யா இருக்கும் நிலைமை அவனை நிலை குலைய செய்தது


அவள் முகத்தில் தண்ணீரை தெளித்து காவ்யாவை எழுப்பினான்


"காவ்யா எழுந்திரிமா என்னாச்சு உடம்பு ஏதும் சரி இல்லையா, டாக்டர் கிட்ட போகலாமா? "


காவ்யா சரவணனின் மார்பில் முகத்தை புதைத்து அழ ஆரம்பித்து விட்டாள்
சரவணனுக்கு என்ன நடந்தது என்று ஒன்றும் விளங்கவில்லை

" ஏதுவ இருந்தாலும் என்கிட்ட சொல்லுமா பரவாஇல்லை"

இதற்கு மேல் சரவனணிண்டம் இதை மறைப்பதில் காவ்யாவிற்கு விருப்பம் இல்லை

" குமாரை மருத்துவமனையில் சேர்த்திருக்காங்க"


அவள் குமார் என்று கூறியவுடனே புரிந்து விட்டது அந்த குமார் என்று?


குமார் காவ்யாவின் முன்னால் காதலன், காவ்யாவின் வீட்டில் காதலுக்கு பச்சை கொடி காட்டிவிட்ட நேரத்தில் குமாரின் வீட்டில் உள்ளவர்கள் இதனை ஏற்று கொள்ளவில்லை


இரு வீட்டாரின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்வதில் காவ்யாவிற்கு உடன்பாடு இல்லை, ஆதலால் குமாரை காவ்யா பிரிய நேரிட்டது


ஒரு வழியாக காவ்யாவின் பெற்றோர் காவ்யாவின் மனதை தேற்றி காவ்யாவிற்கு சரவணனை திருமணம் செய்து வைத்தனர்


இந்த விஷயம் சரவணனுக்கு திருமணத்திற்கு முன் தெரியாது,  காவ்யா தங்களுடைய முதலிரவில் அனைவரையும் வெளிப்படையாக சொல்லிவிட்டாள் அதன் பின்னர் குமார் என்ற வார்த்தை அவள் வாழ்வில் குறுக்கிடவில்லை


" எப்படிமா அவருக்கு என்னாச்சு?"


" தெரியலைங்க"


" சரி நீ பொய் முகத்தை கழுவிட்டுவா நம்ம பொய் பார்த்துட்டு வரலாம்"

காவ்யாவிற்கு போவதா, வேண்டாமா என்று ஒரே குழப்பம் இறுதியாக
அவள் சரவணனுடன் கிளம்பினாள்

மருத்துவமனையில் சென்றவுடன் குமார் அனுமதிக்கபடிருக்கும் இடத்தினை கேட்டறிந்து சென்றனர்

காவ்யா, சரவணனையும் உள்ளே வருமாறு அழைத்தாள்

" இல்ல, வேண்டாம் டா இங்க தான் என்னோட நண்பர் ஒருத்தர் டாக்டரா இருக்கார் நான் அவரை பார்த்துட்டு, அப்படியே குமார் உடம்பு எப்படி இருக்குனு கேட்டுட்டு வரேன்"

என்று சொல்லிவிட்டு அந்த இடத்தினை விடு நகர்ந்தான்

காவ்யா உள்ளே நுழைய முயன்றாள்

" உள்ளே டாக்டர் இருக்காங்க, நீங்க கொஞ்ச நேரம் வெளில காத்திருங்க"
என்று கூறினார்கள்


வெளியில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள், அவளின் கை மேலே இன்னொரு பெண்ணின் கை ஆறுதல் படுத்தியது


காவ்யா திரும்பி யார் என்று நோக்கினாள், அது குமாரின் தங்கை தீபா


" அவருக்கு இப்போ எப்படி இருக்கு தீபா?"


" இல்லை அண்ணி, கொஞ்சம் கவலைக்கிடம்தான் என்று சொல்லினாள்"


காவ்யாவின் கண்களில் கண்ணீர் அரும்புவதை அவளால் நிறுத்தமுடியவில்லை

" அண்ணி, நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்?"

அவள் என்வென்று கண்களால் கேட்டாள்

" அண்ணி இத இந்த சமயத்துல சொல்லலாமான்னு தெரியல, இருந்தாலும் உங்க கிட்ட மறைக்க என் மனசு விரும்பல "

" நீ என்ன சொல்ற?"

" அதுவந்து அண்ணி, நீங்களும் எங்க அண்ணனும் கல்யாணம் பண்ணிக்க போறிங்கன்னு சொன்னவுடனே எங்க வீட்டுல எல்லோரும் சம்மதம் தான் சொன்னங்க, ஆனால் அதுக்கு அப்புறம் ரெண்டு நாள் கழிச்சு எங்க அண்ணனே வந்து இந்த கல்யாணத்தை வேண்டாம்னு சொல்லிடுங்கனு சொன்னார்

எங்களுக்கு ஒண்ணுமே புரியல, சரி நீங்க ரெண்டு பெரும் எதாவது சண்ட போடிருப்பிங்கனு நினைச்சோம் அதுக்கு அப்புறம் ஒரு நாள் என்னோட அண்ணன் உங்களோட கல்யாண பத்திரிக்கையை வெச்சு பார்த்து அழுது கொண்டிருந்தான்"

" அப்போ அவன் கிட்ட கேட்டேன், என்ன ஆச்சு என் கல்யாணத்தை வேண்டாம்னு சொன்ன?"


" அப்போது தான் தனக்கு கேன்சர் இருப்பதாகவும், அதனால் தான் உங்களை கட்டிகொள்ள விரும்பவில்லை என்று தெரிவித்தான்"


" பின்பு நாங்களும், எவ்வளவோ மருத்துவமனைக்கும் அவனை அழைத்து சென்றும் பலன் இல்லை"


" அவனின் இருந்தி நாட்களை அவன் எண்ணி கொண்டிருக்கிறான் என்று கூறினார்கள்"


" இதை உங்களிடம் கூறலாமே என்று எவ்வளவோ எடுத்து கூறியும் என்னுடைய அண்ணன் ஒத்துக்கொள்ளவில்லை, கடைசி வரை இதை உங்களிடம் கூற வேண்டாம் என்று என்னிடம் சத்தியம் வாங்கி கொண்டான், ஆனால் என் மனது கேட்கவில்லை அதனால் தான் அனைத்தையும் உங்களிடம் கொட்டி தீர்த்தேன்"


"கடைசியாக என்னோட அண்ணன் என்கிட்ட கேட்ட ஒன்னு சாகறதுக்குள்ள உங்கள ஒரு முறை பார்க்கணும்கிறது தான்"


"இருந்தாலும் அவனோட ஆசையை எப்படி நிறைவேற்ற போறம்னு தெரியல,
உங்களோட சந்தோஷமான வாழ்கையை நான் குறுக்கிட விரும்பல அதே நேரத்துல மரண படுக்கைல இருக்கிற என் அண்ணனோட ஆசையை நிறைவேற்றலனா நான் மனுஷியே இல்லை"


"அதன் பின்பு தான் உங்களோட கணவர் சரவணனை தற்செயலாக சந்திச்சேன்
அவர்கிட நடந்த எல்லாத்தையும் சொன்னேன்"


" அவர் தான் உங்க வீட்டுக்கு போன் பண்ணி உங்ககிட்ட நேரடியா இதை சொல்ல சொன்னார், நான் என் சின்ன அண்ணன் விட்டு பேச சொன்னேன்"


" நீங்க இபோ இங்க வந்ததுக்கு நான் சரவணனுக்கு தான் நன்றி சொல்லணும்"


என்று அவள் சொல்லி முடிக்கும் முன்னரே டாக்டர்கள் வெளியில் சென்று விட நீங்கள் உள்ளே சென்று பார்க்கலாம் என்று கூறினார்கள்


காவ்யா கண்களை துடைத்து கொண்டே உள்ளே சென்றாள்
அங்கு குமார் மரணத்தின் பிடியில் போராடி கொண்டிருந்தான், காவ்யாவை கண்டவுடன் குமாரின் கண்கள் கண்ணீர் மிதந்தது இருவரும் பேசிக்கொள்ளவில்லை மாறாக இருவரின் கண்களும் பேசிக்கொண்டிருந்தது


காவ்யா குமாரின் கைகளை எடுத்து தான் கைகளுக்குள் எடுத்து வைத்து கொண்டாள், காவ்யாவின் கண்ணீர் துளிகள் குமாரின் கைகளில் பட்டது


அந்த தருணத்தில் குமாரின் உயிர் பிரிந்து கொண்டிருந்தது, வெளியில் இருந்து பார்த்து கொண்டிருந்த சரவணனின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.


முற்றும்.