Tuesday, May 29, 2012

அக்கணம் என்ன செய்வேன்? - சிறுகதை




ராமையா அந்த கடைசி டேபிளை கவனி என்ற முதலாளியின் குரலுக்கு கட்டுப்பட்டு அந்த டேபிளை நோக்கி நகர்ந்தார் ராமையா

15 வருடங்களாக அதே ஹோடேலில் வேலை பார்ப்பவர்,ஹோட்டலின் தரம் உயர்ந்ததே தவிர இந்த மனிதனின் வழக்கை தரம் உயரவில்லை

தங்களது வியர்வைத் துளிகளை பணமாக மாற்றி முதலாளியின் கஜானாவை நிரப்பும் மனிதர்களில் இவரும் ஒருவர்

இட்லி, பொங்கல், வடை, ஊத்தாப்பம், தோசை, ரவை தோசை என்று தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் தான் 15 வருடங்கள் ஓதிய மந்திரத்தினை கடகடவென சொல்ல ஆரம்பித்துவிடுவார்

ராமையாவும் சாதாரண ஆள் இல்லை, சாப்பிட்டுவிட்டு பில் கொடுக்காமல் சென்றாலும் இவர் மன்னித்துவிடுவார், ஆனால் டிப்ஸ் வைக்காமல் சென்றால் அவ்வளவுதான் சிறந்த கேட்ட வார்த்தைகள் பத்தினை தெரிவு செய்து மனதிற்குள்ளே அர்ச்சிக்க ஆரம்பித்துவிடுவர் அவ்வளவு நல்ல குணம் அவருக்கு

கடைசி டேபிளில் உள்ளவர் இந்த ஹோட்டலின் வாடிக்கையாளர் என்பதால் ராமையா விழுந்து விழுந்து கவனிப்பார் அதுமட்டுமில்லாது அவர் நிறைய டிப்ஸ் வைப்பார் என்பதும் மற்றொரு காரணம்


வேலையினை முடித்து விட்டு வழக்கம் போல ராமையா தனது டி.வீ.எஸ் வண்டியினை எடுத்து கொண்டு கிளம்பினர் 

வீட்டிற்க்கு சென்றதும் கை கால்களை கழுவி விட்டு டி.வீ யை போட்டு விட்டு அதன் முன்னே அமர்ந்தார்

" தெய்வானை தெய்வானை"

" வரேங்க, அடுப்படில இருக்கேன் கொஞ்சம் பொறுங்க"
அடுப்படியை விட்டு வெளியில் வந்தாள் தெய்வானை

" என்னங்க?"

" பசங்க தூங்கிடாங்களா?"

" இவ்வளோ நேரம் முழிச்சிருந்து இப்போ தன தூங்கினாங்க"

" ம்ம்ம், பெரியவளுக்கு உடம்பு எப்படி இருக்கு?"

" இன்னைக்கு கொஞ்சம் தாவல"

" அவளோட மருந்து அடுத்த வரம் தீர்ந்து போய்டும், மறந்திடாம நாளைக்கு வாங்கிட்டு வாங்க?"

" ம்ம்ம், வாங்கிட்டு வரேன்"

" அப்புறம் சின்னவனுக்கு ஏதோ எக்ஸாம் பீஸ் கட்டணும்னு சொன்னங்க"

" எவ்வளுவு ரூபாய்?"

"1800"
இந்த செலவுகள் அனைத்தையும் தனது குறிப்பேட்டில் குறித்து வைத்து கொண்டார் ராமையா ஏனெனில் அடுத்த வாரம் அவர் வீட்டு மாத பட்ஜெட்டில் இவை முக்கிய அங்கங்களாக இருக்கும்

ராமையா படிப்பிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார், தான் படிக்காத காரணத்தில் தான் அஞ்சுக்கும், பத்துக்கும் அடுத்தவங்க கைய எதிர் பார்க்க வேண்டிருக்கு அதனால் தான் மகனை படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என்பது ராமையாவின் ஆசை மட்டும் மல்ல, தெய்வானையின் 
கனவும் கூட அதனால் தான் அவர் தன்னுடைய தகுதிக்கு மீறிய பெரிய பள்ளியில் தனது பிள்ளைகளை படிக்க வைத்து கொண்டிருக்கிறார் 

சம்பள நாளை எதிர் நோக்கி அனைவரும் காத்திருந்தனர் தத்தம் தேவைகளை பூர்த்தி செய்ய

சம்பள நாள் அன்று ஹோடெல்லில் வேலை பார்க்கும் அனைவரின் முகத்தில் ஒரு அதிகமான பிரகாசம் ஒன்று இருக்கும் 
அன்று வழக்கத்தினை விட அனைவரும் சீக்கிரமே வேலைக்கு வந்து விடுவார்கள், அதே போல் வேலையும் வேகமாக நடக்கும்
இது அனைத்து இடங்களிலும் நடக்கும் பொதுவான ஒன்றே

அந்த நாளில் யாரேனும் டிப்ஸ் வைக்க விட்டாலும் பெருந்தன்மையுடன் மன்னித்து விடுவர், மொத்தத்தில் அன்று அந்த ஹோடெல்லில் ராமையா யாருக்கு சப்ளை செய்தாலும் அவர்கள் கண்ணனுக்கு ராமையா ஒரு நல்ல மனிதனாகவே தெரிவார் 
ராமையா சம்பளம் வாங்கியவுடன் வாய் நிறைய புன்னகையோடு தனது வண்டியை கிளப்பினார் 

தலைவியை விட்டு சென்று போருக்கு சென்ற தலைவனின் வருகையை எதிர் பார்த்து காத்திருக்கும் தலைவியை போல தெய்வானை வீட்டின் வாயிலையே வெறித்து பார்த்து கொண்டிருந்தாள், அவ்வபோது ஒரு வாரத்திற்கு முன்பே தயார் செய்யப்பட்ட இந்த மாத பட்ஜெட்டினை ஒரு முறைக்கு, இரு முறை சரி பார்த்து கொண்டிருந்தாள் ஏதேனும் விடுபட்டுள்ளதா என்று 

ராமையா வழியில் தான் குழந்தைகளுக்கு பிடித்த பலகாரங்களை வாங்கி கொண்டு சென்று கொண்டிருந்தார், தான் வழக்கமாக செல்லும் வழியில் ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் ஆதலால் தனது பணத்திற்கு பாதுகாப்பு இருக்காது என்று கருதிய அவர் அந்த வழியில் செல்லாமல் மாற்று வழியில் சென்றார்

அவர் இப்போது சென்று கொண்டிருக்கும் பகுதி எப்போதும் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி அது தனக்கும் தனது பணத்திற்கும் பாதுகாப்பு என்று கருதினர் 

அவர் அந்த சாலையினை கடந்து கொண்டிருக்கும் போது, சாலையும் ஓரத்தில் ஒருவர் லிப்ட் வேண்டும் என்பது போல சமிக்கை செய்து கொண்டிருந்தார் மனமோ அவருக்கு இடம் கொடு என்றது, ஆனால் மூளையோ பையில் பணம் இருக்கிறது வேண்டாம் என்றது ஆளும் பார்பதற்கு டிசன்ட்ஆகவே தெரிந்தார் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி இங்க திருடிட்டு எப்படியும் போக முடியாது என்ற நம்பிக்கையில் அந்த நபரை வண்டியில் ஏற்றினர், அந்த நபர் ராமையாவுக்கு நன்றி தெரிவித்து கொண்டு வண்டியில் ஏறினார்

" எங்க சார், போகணும்?"

" சார் என்னை அடுத்த தெருவுல எறக்கி விட்டுருங்க"

" சரி வாங்க"

வண்டி அடுத்த தெருவினை அடைந்தது அவர் இறங்கும் இடமும் வந்தது. 

ஒரு காரின் அருகில் அருகே இறங்கி கொண்டு மீண்டும் நன்றி தெரிவித்து கொண்டு அந்த காரின் கதவை திறந்தார் ராமையா வச்ச கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தார் 

" என்ன சார் பார்க்குறீங்க, இது என்னோட கார் தான் பக்கத்துக்கு தெருல ஒரு கடைக்கு போக வேண்டி இருந்தது, அந்த தெருவே சின்ன தெரு நான் ஒருத்தன் போகணும்கிறதுக்காக அந்த தெருல இவ்வளோ பெரிய கார எடுத்துட்டு பொய் அடைக்க விரும்பல"

என்று அடக்கத்தோடு கூறினார், இவரை மாதிரியே ஒவ்வொரு மனிதனும் இருந்தால் எந்த ஊரில் டிராபிக் ஜாம் இருக்காது என எண்ணி கொண்டு வண்டியை நகர்த்தினார் 

அவரை இறக்கி விட்டு ராமையா சென்று கொண்டிருந்தார், அடுத்த சில நொடிகளில் துப்பாக்கியில் இருந்து தோட்டா வெளியேறும் சத்தம் கேட்டது, ராமையா என்ன வென்று வண்டியை நிறுத்தி திரும்பி பார்த்தார், தான் இறக்கி விட்ட அந்த நபர் தோளில் குண்டு துளைத்தது, மறுகணமே மீண்டும் இரு தோட்டாக்கள் மேலும் சென்று அவரின் உடம்பை துளையிட்டது அக்கணமே அவர் சரிந்து கீழே விழுந்தார் ஒரு நிமிடம் கண்ணே கெட்டி விட்டது அவருக்கு, டி வீ யில் கொலையை பார்த்தாலே அனைத்து விடும் அவரின் முன்னாள் ஒரு கொலை 

அடுத்த சில நொடிகளில் ராமையா வண்டியை நோக்கி சிலர் மறித்து சுற்றி வளைத்தனர் முதலில் அவர்களை ரவுடி கும்பல் என நினைத்த நான் அவர்களின் காக்கி நிற கால் சட்டையினை, காலில் அணிந்திருந்த ஷீவை பார்த்ததுமே புரிந்துவிட்டது அவர்கள் காவல் துறையினர் என்று, ராமையாவின் உடம்பு வேடவடத்தது உடம்பெங்கும் வியர்க்கதத் தொடங்கியது 
நல்ல வாட்ட சட்டமான ஒருவர் ராமையாவின் முன்னாள் வந்து நின்றார் 

" வண்டிய விட்டு கீழ இறங்குடா?"

அவர் கூறிய அந்த தோரணையில் என்ன எது என்று கேளாமல் மறுகணம் ராமையாவும் வண்டியினை விட்டு கீழே இறங்கினார் 

" யாரு நீ?, எங்கிருந்து வர்ற?, உனக்கும் ஷங்கருக்கும் என்ன சம்பந்தம்?"

என கேள்விகளை அடுக்கி கொண்டே சென்றார், ராமையாவுக்கு ஒன்றும் புலப்படவில்லை, தான் யார் எங்கிருந்து வருகிறேன் என்றேன் என்ற முழு விபரத்தையும் சொன்னார். அந்த அதிகாரியின் கண்களை உடற்று நோக்கி அவர்கள் கேட்டு கொண்டிருந்த கேள்விகளுக்கு பதில் கூறினார்,  இருப்பினும்  அந்த அதிகாரி அதை நம்பவில்லை என்பது அவரது கண்களில் தெரிந்தது  

தனக்கு கீழே வேலை செய்யும் ஒருவரை அழைத்து ராமாவை முழுமையாக சோதனை செய்யும் படி உத்தரவிட்டார் 
உடனே அந்த காவலாளியும் உடம்பு முழுக்க சோதனை செய்தார்



"என்னையா கத்தி, துப்பாக்கி எதாவது வெச்சுருக்கான?"

" அதெல்லாம் இல்ல சார், பணம் மட்டும் வச்சுருக்கான்"

" அதை வெளில எடு"

என உத்தரவு பிறப்பிக்க ராமையாவின் பையில் இருந்த மொத்த சம்பள பணத்தையும் எடுத்து அந்த அதிகாரிக்கு கொடுத்தார், அந்த அதிகாரி அந்த பணத்தின் வாசனையை மோப்பம் பிடித்து விட்டு தனது சட்டை பையினுள் அந்த பணத்தினை நுழைத்தார்

" உன் பேச்சுல எனக்கு இன்னும் நபிக்கை வரல, இருந்தாலும் நான் உன்ன விடுறேன் இனிமேல் இந்த மாதிரி முன்ன பின்ன தெரியாத ஆளுகெல்லாம் லிப்ட் கொடுக்காத புரிஞ்சதா?"

" யோவ், எட்டு இவன் வீடு எங்க இருக்குனு கேட்டு எழுதி வாங்கிட்டு அவனை அனுப்பிடு"

என்று சொல்லி கொண்டு பணத்தினை எடுத்து கொண்டு நகர்ந்தார் அந்த அதிகாரி, ராமையா வீட்டு முகவரியை தந்து விட்டு 

" சார், பணம்" என்றார் 


" யோவ் , போயா ஐயா ஏற்கனவே கோவமா இருக்கார், நீ வேற பணத்தை கேட்டு மேற்கொண்டு அவர கோவப்படுதாதா"


" பேசாம இங்கிருந்து போய்டு, அதன் உனக்கு நல்லது"

" சார் பணம் இல்லாம என்னால வீட்டிற்கு போக முடியாது"

" இப்போ நீ கிளம்ப போறியா, இல்ல உன்ன உள்ள தூக்கி போடவா?"
என போலீசாருக்கு உரிய தோரணையில் பேசினார்

" சார் அது என்னோட சம்பள பணம் சார் , அதை வெச்சு தான் இந்த மாசம்  என்னோட குடும்பத்த நடத்தனும் வீட்டுல என்னோட பொண்டாட்டி, குழந்தைங்க எல்லாம் என்னை எதிர் பார்த்து காத்துகிட்டு இருப்பாங்க உங்கள கெஞ்சி கேக்குறேன் சார் கொடுத்திருங்க?"

" நானும் பார்த்துகிட்டே இருக்கேன் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருக்க"

என கூறி ராமையாவின் கண்ணத்தில் பளார் என ஒரு அரை விட்டார், ராமையா நிலை தடு மாறி தனது வண்டியின் மேல் விழுந்தார் தனது பிள்ளைகளுக்காக ஆசையாக வாங்கிய இனிப்புகள் கீழே சிதறி விழுந்தன

"ஏட்டு, அங்க என்னையா சத்தம்?"

" அது ஒன்னும் இல்ல சார்"

" யோவ், ஒழுங்கா இடத்தை காலி பன்னு அது தான் உனக்கு நல்லது புரியுதா?"

அதிகார வர்க்கத்தினை எதிர்த்து கேள்வி கேட்கும் நிலையில் தான் இல்லை என்பதனை புரிந்து கொண்டு ராமையா கலங்கிய கண்களுடன் வண்டியினை அங்கிருந்து நகர்த்தி வீட்டிற்கு வந்து சேர்ந்தார்

வீட்டினுள் நுழைந்ததும் தெய்வானை 

"என்னங்க ஒரு மாதிரி இருக்கீங்க, என்ன ஆச்சு உங்களுக்கு சொல்லுங்க?"

குழந்தைகள் ஓடி வந்து அவரை ஒட்டி கொண்டு 

"என்னப்பா, இன்னைக்கு ஸ்வீட் ஏதும் வாங்கிட்டு வரலையா?" 
என கேட்டது 

இவர்கள் கேட்ட அதைனை கேள்விகளுக்கும் ராமையாவின் கண்களில் இருந்து கண்ணீர் மட்டுமே பதிலாக வந்தது.....

முற்றும்.