Thursday, October 11, 2012

எப்போது நீ கவிஞன் ஆனாய்? -


என்னுடைய கிறுக்கல்களை பார்த்து
என்னவள் வினாவினாள்
எப்போது நீ கவிஞன் ஆனாய் என்று?

அவளிடம் கூறினேன்,
உன்னைப் போன்ற தேவதையுடன்
காதல் கொண்ட பொழுதில் இருந்து!..

Tuesday, October 9, 2012

கடல் கடந்து..






இடம் பெயர்ந்து 
இன்ப துன்பங்களை மறந்து 
உற்றார், உறவினர், நண்பர்களை பிரிந்து 
கடல்களை கடந்து வந்திருக்கும் 
என்னைப் போன்றோர்க்கு 
எத்தனை கோடி ஊதியம் கொடுத்தாலும்
தாயின் மடிக்கும்,
தந்தையின் அதட்டலுக்கும்,
சகோதரியின் பாசத்திற்கும்,
ஏங்கித் தானே கிடக்கும் இந்த மனசு?



அந்நிய மண்ணில் கால் எடுத்து வைத்த முதல் நாள்,
எழுதிய வரிகள்...

Tuesday, October 2, 2012

யானை பசி






கடை தெருவிற்கு சென்று காய்கறிகளை
வாங்க சென்றேன்

மீதி சில்லறை 5 ரூபாய்க்கு பதிலாக
சிறிய இனிப்பு பொட்டலத்தை கொடுத்தான்
அந்த கடைக்காரன்

அதை வாங்கி கொள்ள மனம்
வராததால் மீதி சில்லரையினை கேட்டு
சண்டை போட்டேன்

போகட்டும் 5 ரூபாய் தானே
என்றது மனது , ஆனால் மறுபுறமோ
கேளு இது உனது உரிமை என்றது

ஒரு வழியாக மீதி சரியான சில்லறையை
வாங்கிகொண்டு நடந்தேன்,

வரும் வழியில் ஒரு பிச்சைகாரன் கையை
நீட்டி உதவி கேட்டுகொண்டிருந்தார்

முகத்தை பார்க்கவும் மிகுந்த வறுமையும், பசியும் 
இருப்பது கண்களில் தெரிந்தது

பாக்கெட்டினுள்  கையை நுழைத்தேன்
5 ரூபாய் வந்தது, ஹ்ம்ம்  கடைக்காரனிடம்

சண்டை போட்டு வாங்கிய அதே 5 ரூபாய் தான்

அந்த ரூபாயினை கொடுத்து விட்டு சிறிது தூரம்
நடந்து சென்று பின்னல் திரும்பி பார்த்தேன்

அந்த பிச்சைக்காரர் அருகினில் இருந்த
தேனீர் விடுதியினில் ஒரு தேனீரினை
பருகி கொண்டிருந்தார்

ஏதோ என்னால் முடிந்த அளவு அவரின் பசியினை
தீர்க்க முடியாவிட்டாலும், யானை பசிக்கு
சோளைபோரியை...