Saturday, January 5, 2013

ஓர் இரவில் - கிறுக்கல்

ஓர் இரவில் துயிலை மெல்ல 
தொலைத்தெழுந்து செய்வதறியாது 
வான் நோக்கினேன் 

சிறு சத்தத்துடன் மின் விசிறி சுழன்று 
கொண்டிருந்தது கண்மூடி 
மீண்டும் உறங்க எத்தனித்தேன் 
ஆனால் ஏனோ அது முடியவில்லை

சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு 
கடிகாரத்தை உற்று நோக்கினேன் 
அது நடுநிசி என்றே காட்டியது 

சலனம் இல்லாது  மீண்டும் படுக்கையின் 
மீது விழுந்தேன் என்ன செய்வதென்று 
புரியாது 

அருகாமையில் இருந்த புத்தகத்தை எடுத்து புரட்ட  
துவங்கினேன் மனம் ஏனோ அதில் லைக்கவில்லை 

மெல்ல கண்மூடி அன்றைய தினத்தில் 
நான் எத்தனை முறை பொய்கள் கூறி இருக்கிறேன் 
என்று எண்ணி பார்க்க துவங்கினேன் 

காலையில் அம்மாவிடம் நன்றாக உறங்கினேன் 
என்பதில் இருந்து துவங்குகிறது அந்த பட்டியல் 

இரவில் படுக்க செல்லும் முன் அவளின் பிடியில் 
இருந்து தப்பிக்க தூக்கம் வருகிறது என்பது வரை 
இருபது பொய்கள்

அன்றாட வாழ்வில் ஒரு நாளைக்கு இருபது,
இதற்க்கு நடுவில் எத்தனை பொய்களை மறுத்தேன் 
என்பது எனக்கு நினைவில்லை 

நாளையில் இருந்து பொய் பேசுவதை நிறுத்தி கொள்ள 
வேண்டும்., ஹ்ம்ம் குறைத்து கொள்ள வேண்டும் என்று 
நினைத்து உறுதி எடுத்து கொண்டேன் 

பொய்மையை பற்றிய இந்த ஆழந்த சிந்தனையின் 
நடுவில் எப்போது மெய் மறந்து உறங்கினேன் 
என்பது எனக்கு நினைவில்லை 

மெல்ல கதிரவன் என் வீடு சன்னலின் வழியே 
ஊடுருவி என் முகத்தின் மேல் விழுந்தது, எழுந்தது 
கதிரவன் செயல் மட்டும் அல்ல, 
கைபேசியின் அழைப்பு மணியினாலும் கூட 

ராத்திரியில் என் என்னுடன் பேசவில்லை 
என்று என்னவள் கேள்விகனைகளை எழுப்ப 

நேற்று அசதியினால் கண்  விழிக்க முடியவில்லை என்று 
என்னையும் அறியாமலே மீண்டும் எனது அன்றைய 
பட்டியலை துவங்கினேன்"

No comments:

Post a Comment