Thursday, August 26, 2010

மனம் சொல்வதை கேள்

 மனிதன் மனம் ஒரு குரங்கு என்பது உண்மை தான்,

நிமிடத்திற்கு நிமிடம் மாறுதல்கள், எண்ணங்கள், விருப்பங்கள்,
சோகங்கள், சந்தோஷங்கள் என பலவற்றை தன்னுள் 
வைத்து கொண்டுள்ளான் மனிதன்

பாவம்?? அவன் தான் என்ன  செய்வான்  

இன்றைய கால கட்டத்தில் மனிதன் எந்திரங்களோடு வாழும்
வாழ்கையை பழகி கொண்டான்,

இன்றைய சுழலில் 
மனம் சொல்வதை கேட்பவர்களை விட,
(மதி) சொல்வதை கேட்பவர்களே அதிகம்,,

ஆறு அறிவு கொண்ட மனிதனின் வாழ்க்கையில் 
ஏழாம் அறிவாய்  கணினி என்னும் கணிப்பொறி வந்துவிட்டது,

அந்த கணினியின் பேச்சுக்கு கட்டுப்பட்டு, தான் வாழ்கையை 
வாழ்ந்து கொண்டிருக்கிறான்,,

தான் சொந்த பந்தங்களை மறந்து,
கட்டளைக்கு கட்டுப்படும் 
கணினியை போல் ஆகி விட்டான் 
நீ தோல்வி அடையம் நேரத்தில் உன் அறிவு சொல்லும்
யோசனையை கேள் , 
உன் வெற்றிக்கான வழிமுறையை அது சொல்லும், 

நீ சந்தோஷ மடையும் நேரத்தில்,
உன் மனம் சொல்வதை 
கேள், அது உன்னை மேலும் உற்சாக படுத்தும் ,,

மனம் சொல்வதை கேள்......

No comments:

Post a Comment